பக்கம்:நெற்றிக்கண்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 & நெற்றிக் கண்

பிட்ட உண்மைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்: அவர் அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பதாகத் தோன்றியது. - அவர் அந்தக் குறிப்பிட்ட நடிகருக்காகவே உயிர் வாழும்: விசிறி போலிருக்கிறது. -

பத்திரிகை முதலாளியின் விருப்பு வெறுப்புக்களுக்கு. ஏற்றபடி மனிதர்களைப் புகழவும். வெறுக்கவும் பழகிக் கொண்டுவிட்ட ஒரு நிறுவனத்தில் வயிற்றுப் பிழைப்பை. நடத்தும் நீங்கள் இலட்சியம் பேசுவது உங்களுக்கே வேடிக் கையாக இல்லையா?-என்ற கேள்விக்குக் கீழே கூட்டத். தில் ஒருவன்-என்று எழுதிவிட்டு அந்தக் கேள்வியைக் கேட்டவர் தன்னைத் தப்பித்துக்கொள்ளவோ, மறைத்துக் கொள்ளவோ முயன்றிருந்தார்.

"இந்தக் கேள்வியைக் கேட்கும் தைரியசாலி நான்தான் என்று தன் பெயரைக்கூடத் தெரிவித்துவிட விரும்பாது ஒரு. கேள்வியைக் கேட்டிருப்பதால் இதற்குப் பதில்சொல்லிவிட வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன்-என இப்படித் தொடங்கி அவன் மறுமொழி கூறியபோது கூட்டத்தில் உற்சாகமான கைத்தட்டல் ஒலி எழுந்தது. உள்ளுறச் சுகுணன் சில சமயங்களில் இந்த விதமான பொதுக் கூட்டங்களையும், சொற்பொழிவுகளையும், தவிர்க்க விரும்பினான். பசியையும், சபலங்களையும் போல் மனிதன் நிரந்தரமாக விட முடியாத பலவீனங்களில் ஒன் றான புகழ்தான் இப்போது இந்தப் பொது மேடைகளில் எல்லாம் மலிவாகச் செலவழிக்கப்படுகிறது. தலைவர் பேசி சாளரைப் புகழ்வதும், பேச்சாளர் தலைவரைப் புகழ்வது மாகப் பெரும்பாலான மேடைகள் ஒரு சம்பிரதாயச் சடங் காக அமைவதைக்கண்டு பலமுறை தனக்குள் மனம் வெதும்பியிருக்கிறான் சுகுணன்,

'பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’-என்ற பழ. மொழியை இனிமேல் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். பத்தோடு பதினொன்றாக அந்தப் பசியையும் பறந்து பேர்கச் செய்துவிடுகிற புதுப் பசி ஒன்று இருக்கிறதே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/90&oldid=590460" இலிருந்து மீள்விக்கப்பட்டது