பக்கம்:நெற்றிக்கண்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9:0 நெற்றிக் கண்

மேல் உங்கள் சொற்பொழிவுகளை ஒன்றுவிடாமல் கேட்க வேண்டுமென்று எனக்கும் இன்று ஒரு புதிய ஆசை உண்டாகி. யிருக்கிறது'- என்ற பொருளில் ஆங்கிலத்தில் கூறினான் துளசியின் கணவன்.

'மனிதனின் மனத்தை அவனறியாமலே திறப்பதற்குப் பிறர் பயன்படுத்துகிற சுலபமான கள்ளச் சாவி இந்தவித மான முகமன் வார்த்தைகள் தான்-என்றெண்ணியவ: னாகத் தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் சுகுணன். முகத்தில் கலக்கமோ, துயரமோ தெரியாமல் பிளாஸ்டிக் கில் வார்த்தெடுத்ததுபோல் நகரங்களின் கல்லூரி முகப்புக் களிலும், தியேட்டர் வாயிலிலும் திரியும் செல்வக் குடும். பத்து இளைஞர்கள் பலரிடமிருக்கும் நாகரிகப் பேச்சும், சிரிப்பும் துளசியின் கணவனிடமும் இருந்தன. ஆணின் மன மில்லாததோடு பெண்ணின் முகமுள்ள பல இளைஞர்கள் அங்கங்கே நகரங்களில் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தென்படுவார்களே-அவர்களில் ஒருவனைப் போலத்தான் எதிரே நின்ற துளசியின் கணவனும் அப்போது தோன்றி: னான்.

தேசக் கவலையோ, வீட்டுக் கவலையோ இல்லாமல் உயர்தர உத்தியோகங்களையும், சொகுசான காதல் வாழ் வையும் கனவு காணக்கூடிய இந்த விதமான இளைஞர்கள்அதாவது, செலுாலாய்ட் பொம்மைகளைப்போல் சாதாரண. மான காரணங்களுக்காகவே உடைந்து விடக் கூடிய ஆண், மையற்ற இளைஞர்கள் பலர் இந்த நூற்றாண்டில் எங்கும். அதிகரித்திருப்பதைச் சுகுணன் . பலமுறை பல இடங்களில், கண்டு மனம் நொந்திருக்கிறான். - - இன்றைய இந்தியாவின் வறுமைகளைப்பற்றியோ, நாளைய இந்தியா எதிர்கொள்ள வேண்டிய துயரங்களைப் பற்றியோ, நினைப்போ, கவனமோ, கவலையோ இல்லா மல்-தன்னையே மையமாக வைத்துத் திரைப்படக் கதையைப் போல் ஒரு சொப்பன வாழ்க்கையைக் கனவு காணும் இம்மாதிரி இளைஞர்கள் பெருகப் பெருக இந்தியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/92&oldid=590463" இலிருந்து மீள்விக்கப்பட்டது