பக்கம்:நெற்றிக்கண்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9 I

ஆண்மையில் வறுமையடைகிறது என்று தோன்றியது. இத் தகைய இளைஞர்களைப் பற்றி மீசை முளைத்த பெண் பிள்ளைகள்- என்று சுகுணன் முன்பு துளசியிடமே தந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் கேலி செய்திருக்கிறான். புலி நகம் பதித்த தங்கச் சங்கிலி அணிந்து கொள்ளுதல்’ சுருள் சுருளாக முடி வளர்த்தல்", இவை தவிரப் பெரிய தேசிய இலட்சியங்கள் எதுவும் பதியாத விடலை மனத் தோடு கல்லூரிப் படிகளிலிருந்து கீழிறங்கும் இது போன்ற இளைஞர்களிலிருந்து மனவலிமை மிக்கவர்களான இராம. கிருஷ்ணரோ, காந்தியோ மனவலிமையோடு உடல் வலிமையும் மிக்கவர்களான சிவாஜியோ, நேதாஜியோ, மறுபடி இந்தியாவில் தோன்றிவர முடியுமா?- என்று விநோதமாகத் தனக்குத்தானே அடிக்கடி ஒரு கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்வது அவன் வழக்கம். -

'இப்படி ஒர் அப்பாவி இளைஞன் தனக்குக் கணவனாக வரவேண்டுமென்று துளசி கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். என் எழுத்துக்களோடும் என்னோடும் எத்தனை அந்தரங்கமாகப் பழக முடியுமோ அத்தனை அந்தரங்கமாகப் பழகி. இலக்கிய ருசிகளை உணர்ந்த மனப் பாங்குடனே வாழ்க்கையை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தவள் துளசி. பெண்ணே ஓர் அழகு. அவளிடம் ஞானமோ, கல்வியோ, சங்கீதமோ, நடனமோ, சேர்ந் திருந்தால் அது அவளுக்கு மற்றோர் அழகாகி விடுகிறது. அழகின் பல்வேறு ருசிகளையும் ருசிகளின் பல்வேறு அழகு களையும் பழகிக் கொண்டு விட்ட துளசியைப் போன்ற இளம் பெண் ஒருத்தி-சொகுசாக வாழ்வது'-என்பதைத் தவிர வேறு ருசிகள் எதையும் எதிர்பாராத ஒருவனோடு வாழ்வில் எவ்வளவு தூரம் கை கோத்துக் கொண்டு நடந்து போக முடியும்? t -

துளசியின் நிலை சிந்திப்பதற்கே வேதனை தருவதாக

இருந்தது. இப்படி வாழ் வி ல் எதிர்பார்த்ததை அடையாமல் ஏமாறிய ஒர் அழகிய பேதைப் பெண்ணைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/93&oldid=590464" இலிருந்து மீள்விக்கப்பட்டது