பக்கம்:நெற்றிக்கண்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9 3

ஆனால் ஒற்றைக் கதவுப் பிரச்னையால் அதுவும் முடியாமல் போயிற்று.

மெஸ்ஸில் சாப்பாடு முடிகிற நேரம். அதற்கு முன்னறி விப்பு சாம்பார், ரசம் போலவும் (தண்ணிர் பெருகி) ரசம் -சாம்பார் போலவும்) அடிவண்டல்வரை வற்றி) ஆவது தான். ஏறக்குறைய அப்படி ஆகிற நேரம் வந்திருந்தது. -காய்கறிகள் நிவிறயக் கடுகு மயமாகவும் பருப்பு மயமாகவும்

வெளிவந்தன.

தன்னை நினைத்துத் தவித்துக் கொண்டுபோகும் ஒருத்தியின் ஞாபகம் உள்ளே சுடும் வேதனையில் உணவைச் சுவையில்லாமல் உண்டு முடித்து விட்டு அறைக்குப் போய்ச் சேர்ந்தான் சுகுணன். -

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒருவர்க்கு மற்றொரு வர் அர்ப்பனமாகி விடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் உள்ளேயே கணிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது

அணைவதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது.

மனத்தை ஒரு முகப்படுத்துவதற்காக ஏதேனும் நல்ல :புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம் என்று புத்தக அலமாரி .யருகே போனவன் நீண்ட நாட்களாக அங்கேயே கவனிக்கப்படாமல் கிடந்த ஒரு புகைப்பட ஆல்பத்தினால் கவனம் கவரப்பட்டு அதை முதலில் எடுத்தான். ஒரு காலத்தில் அவன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் படங் களை எல்லாம் துளசி அதில் பத்திரமாக ஒட்டி அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டு வந்தாள். அவன் வெளிநாடு சென்று வந்த காலத்தி ல் எடுத்த புகைப்படங்களும் அதில் இருந்தன. ஒருமுறை விமான நிலையத்தில் கல்கத்தா விலிருந்து பத்திரிகையாளர் பெடரேஷன் காரியமாக வந்திருந்த நண்பர் கோஷைத் திரும்ப வழியனுப்ப அவன் போயிருந்த போது துளசியும் கூட வந்திருந்தாள். அப்போது தற்செயலாக வேறு காரியமாக அங்கு வந்திரு ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/95&oldid=590466" இலிருந்து மீள்விக்கப்பட்டது