பக்கம்:நெற்றிக்கண்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - நெற்றிக் கண்

சுகுணனுக்கு மிகவும் வேண்டிய புகைப்படக்காரர் ஒருவர் அவனையும். துளசியையும் இருவரும் அருகருகே நெருங்கி நின்ற நேரத்தில் அவர்களே அறியாதபடி ஒரு படம் பிடித்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் புகைப்படக்காரரான நிருபர் மிக நன்றாக வந்திருந்த, அந்தப் படத்தைக் கொண்டு வந்து காண்பித்த போது தான் சுகுணனுக்கே அது தெரியும். படத்துக்காக நிற். கிறோம் என்ற எச்சரிக்கையும் ஏற்பாடும் இல்லாமல் இரு. வருமே தற்செயலாய் இயல்பாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டு. நிற்கும் போது எடுக்கப்பட்ட படமாகையினால் அது மிக மிகஅழகாயிருந்தது. -

படத்தில் துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பூஞ்செடியைப் போல் பொலிவுறச் சிரித்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே இனிமையாயிருக்கிற, இராகங்களில் எப்போதாவது சில சமயங்களில் புதிய கற்பனைகளும், சங்கதிகளும் பிடிபடுகிறாற் போல் அந்தப் பட்த்தில் அவள் இயல்புக்கும் அதிகமாகவே அழகாயிருப் பதாகச் சுகுணன் அவளிடம் அன்று கூறிய போது அவள் அதை மறுத்தாள்.

"என்னை விட நீங்கள் தான் அதிக அழகாயிருக் கிறீர்கள் இந்தப் படத்தில்'- என்று அவள் அப்போது: அவனை மட்டுமே வியந்திருந்தாள். . ، ۱ -

"ஒருவர் மேல் இன்னொருவர் சத்தியமான பிரியம் வைத்துவிட்டால் சொந்த அழகு சம்பந்தமான தற். பெருமைகடப் போய் விடுகிறது பார்த்தாயா துளசி? இந்தப் படத்தில் நீ தான் அழகாயிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் தான் அழகாயிருப்பதாக நீ சொல் கிறாய். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு புனிதமாக, எவ்வளவு நம்பிக்கையாக, எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொருவருக்காக விட்டுக் கொடுக்கிறோம் பாரேன்' என்று தான் அன்றைக்கு மனம் நெகிழ்ந்து அவளிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/96&oldid=590467" இலிருந்து மீள்விக்கப்பட்டது