பக்கம்:நெற்றிக்கண்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 95

சொல்லியது கூட இப்போது சுகுணனுக்கு நினைவு. வந்தது. - .

ஞாபகங்களையும், அவற்றைப் பசித்தவன் பழங் கணக்குப் பார்ப்பது போல் மறுபடி காண விரும்புகிற நைப்பாசையையும் தவிர்க்க முடியாமல் அந்த ஆல்பத்தை எடுத்துப் பிரித்து விமான நிலையத்தில் எடுக்கப் பெற்ற பழைய படம் இருந்த பக்கத்தை விரித்தான் சுகுணன். மேஜை விளக்கின் ஒளியில் அந்தப் படம் பளீரென்று பிரகாசமாகத் தெ ந் த து . முன்பு அந்தப் படத்தை ஆல்பத்தில் வைக்கும்போதுகூட, அதை ஆல்பத்தில் வைக்கலாமா கூடாதா என்பது பற்றி துளசிக் கும் அவனுக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் நடந்திருக் கிறது. அதை ஆல்பத்தில் வைக்கக் கூடாதென்று அவன் வாதாடினான். அப்படித்தான் வைப்பேன்’ என்று அவள் பிடிவாதம் பிடித்து அதை வைத்திருந்தாள். அந்தப் படத்தின் பின்புறம் அப்போது அவள் ஏதோ எழுதியதாகக் கூட அவனுக்கு நினைவிருந்தது, நான்கு ஒரமும் படம் சொருகப்படுவதற்காக அமைந்திருந்த மடிப்புகளிலிருந்து பூக்கொய்வதுபோல் படத்தை மெல்ல விடுவித்துப் பின் புறம் பார்த்தான் அவன். -

"உவமையும் பொருளும்போல் ஒருமனம் இருவடிவம்' -என்று எழுதியிருந்தது. முத்து முத்தாகத் துளசியின் கையெழுத்துத்தான் அது. திடீரென்று ஒரு விநாடி உள்ளே எழுந்த சினத்தீயின் அனலில்-அந்தப் படத்தை அப்படியே கிழித்தெறிந்துவிட வேண்டும் போல் கை துடி துடித்தது. ஆனால் அடுத்த விநாடி அப்படிச் செய்யவும் மனம் வரவில்லை.

ஒரு காலத்தின் ஞாபகத்தை இன்னொரு காலத்தில் கிழிப்பதால்தான் என்ன பயன்? படங்களைப் பத்திரப் படுத்துவதோ, சேர்த்து வைப்பதோ அவனுக்கு வழக்க மில்லை. துளசிதான் பூம்பொழில் ஃபோர்மெனிடம் சொல்லி அழகிய ஆல்பமொன்று பைண்டு செய்து வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/97&oldid=590468" இலிருந்து மீள்விக்கப்பட்டது