பக்கம்:நேசம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94லா. ச. ராமாமிர்தம்


'ஒஹோ, இப்படி ஒரு சங்கதியா? சபேசன் குரலில் ஏளனம் ஒலித்தது. .துபோ மன்னி, நீங்கள் இவளுக்கு ஒர்ப்படி ஆனால் எனக்கு அக்கா இல்லையா?” இாமாவின் குரலில் மெய்யாகவே ஒரு குழப்பம் தெரிந்தது. கெளரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 'அக்கா, அவர் என்ன சொல்கிறா?’’ ரெண்டு பேரும் சேர்ந்து கூத்துலே கோமாளி. பண்ணறா-சங்கீதக்காரர் வேறே. அதிலும் சபேசன் சகோதரர்கள் வேறே. கொஞ்சம் ஒருமாதிரியாத்தான் இருப்பா பயப்படாதே.’’

  • அப்போ எங்களுடைய ராச்சாப்பாடு ராத் தங்கல் இன்னிலேருந்து ரூட் 20பி யா?

"சரி, சரி போதும் உள்ளே வாங்கோ’ கெளரி சற்றுச் இடுவிடுப்பாகத்தான் இருந்தாள். "அவள் ஏற்கெனவே, மிரண்டிருக்கா ಹಿ! பேச்சு நடை புரிய இன்னும் கொஞ்ச நாளாகனும் திஸ்ரம், கண்ட ஜாதி திரிபுடை-' அம்மா! பழைய நினைவுகளின் சுழல் அவளை மெதுவாய் உள்ளிழுக்கையிலேயே, கெளரி பக்கத்தில் ராஜி முகத்தை ஒரக்கண்ணால் கவனித்தாள். ராஜி அசாத்திய அழகில் பொலிந்தாள். அவளுடைய சுபாவமே அவள் உள்ளுக்கு முறுக முறுக முகம் மெருகிட்டது. இது கெளரி கண் கண்ட அநுபவம். ஆனால் அவள் வெதும்பலுக்கு காரணந்தான் சரியாகப் பிடிபடவில்லை. பாவம், சாமா. நாளுக்கு நாள் பாவம், பாவம் சாமா கெளரி உதட்டில் புன்னகை ஆனால் கண்களில் சங்கடம் முற்றும் மறைக்க முடியவில்லை. அன்றிரவு, கெளரியின் கவலை வீண்போகாமல், ராஜி வெடித்தாள். ZH ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/100&oldid=1403530" இலிருந்து மீள்விக்கப்பட்டது