பக்கம்:நேசம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா99


இதோ பார் சாமா, நீங்கள் சிறிசுகள். அவள் புதுசு. தம்முடைய குண்டுகளை அவள் எடை தாங்கமாட்டாள். அவளுக்குகந்த எடை மயிலிறகு, தங்க ரேக்கு, பாசிமணி, குங்குமப்பூ பச்சைக் கற்பூரம், பட்டுநூல், இதுபோல துட்பமான பண்டங்கள். இப்போ நீங்கள் தனித்துச் சந்தோஷமாயிருக்க வேண்டிய நாட்கள். தேனிலவு நாட்கள், அவளை அழைச்சுண்டு குற்றாலம்போ, அன்னியாகுமரியில் சூரியோதயம், அஸ்தமனம் பாருங்க. கோவளம் காட்டு, பிழைப்புப் பிரச்னைதான் எப்பவும் இருக்கு அப்புறம் அவசியம் இருந்தால் இப்போ உன் மாதிரியே அவளுக்கும் மனசு அப்புறமும் இருந்தால், தேவி சித்தமும் இட்ம் கொடுத்தால்-’

ஆல் ஆல் ஆல்...ஆல்களுக்குக் கணக்கேது? சபேசனே கேட்டுவிட்டான். 'என்ன கெளரி ஒரே பிடிவாதமா அவாளை விரட்டி விட்டே?” கெளரி, மெஷினைச் சற்று முரட்டுத்தனமாகவே ஒட்டினாள். தையலின் மேல் அவள் முகம் கூடவே குனிந்தது. "நம்க்குக் கலியாணமாகி நாலு வருடங்கள் சந்தோஷ மாக இருந்தோம். அப்புறம் சாமா வந்தான் அந்த ஏழெட்டு வருஷங்கள் அசல் கனவுபோலவே, மூவரும் நம்பமுடியாத சொர்க்கத்தில் வாழ்ந்தோம். ஆனால் கனவு கலையத்தான் இருக்கு. கலையறப்போ, என்று, எப்படிக் கலையுமோ என்கிற திகில் எனக்கு எப்பவுமே உண்டு. கலையற வேளை கம் வந்துடுத்து, கலைஞ்சுதானே ஆகணும்: கலைஞ்சது தமக்கு அதிர்ச்சியா இருக்கப்படாது. இந்தச் சமயத்துக்கு தமக்கு முக்கியம் அமைதி, அவாளுக்கும் ஆவான், வாழ்க் கைன்னு வேண்டாமா?’’ லேசாக மூச்சு திணறிற்றோ? "உண்மையி,ேகு, அவாளிடம் நமக்கு என்ன உரிமையிருக்கு, நீங்களே ஒ லுங்கோ, சாமா, என்ன ரத்த சம்பந்தமா?' - &?డ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/105&oldid=1403553" இலிருந்து மீள்விக்கப்பட்டது