பக்கம்:நேசம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104லா. ச. ராமாமிர்தம்


மேலும் நடந்தான். மனம்போன போக்கு இல்லை. கால் போன போக்கு ஒவ்வொரு துாறலும் வாழைத்தண்டு தடுமன் கனத்தில் இறங்கிற்று. ஒன்றிரண்டு மின்சாரத் கம்பங்கள் குறுக்கே விழுந்து கிடந்தன. அந்த ஆபத்துகளை யெல்லாம் விலக்கிக்கொண்டு, கால்கள் ஜாக்கிரதையாகத் கொண்டு சென்றன. அதென்ன பாலமா? கைப்பிடிக் சுவரின் மேல் அமர்ந்தான். அடியில் வெள்ளத்தின் இரைச்சல், இந்த மழை இறைவனின் துயரந்தான். உயிரை வீலையில் படைத்துவிட்டு அதுகளின் கண்ணிரைத் துடைக்க வகையறியாமல்தான் இப்போ கண்னிராய்ப் பெருக்கு கிறான். பிரயோசனம்? ஆ, அது என்ன? குனிந்து நோக்கினான். மின்னலில் ஒரு சோம்பல் தெரிந்தது. தோன்றிய சூட்டில் மறையவில்லை. தங்கித் தயங்கிற்று. பாலத்தின் கவாண்டியில் பாம்பு வாலைச் சுழட்டுவது போல் புரளும் வெள்ளத்தின் வீக்கத்தில், ஒரு காகிதக் கப்பல் தத்தளித்து அடித்துக் கொண்டு போயிற்று. அதன் பாய் மரத்தில் நகர்த்திரங்களில் மூன்று எழுத்துக்கள் பொறித்த்த்...... "அம்மா!" அந்த அலறலை அப்போதுதான் பாய்மரம்போல் விரிந்து இறங்கிய ஒரு சாரல் திரை அடித்துக்கொண்டு போய் விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/110&oldid=1403558" இலிருந்து மீள்விக்கப்பட்டது