பக்கம்:நேசம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்வி கால், அரை, முக்கால்கண்-கோழித் தூக்கத்தின் செருகளிலிருந்து வெடுக்கென்று விழிப்பு வந்தது. பக்கத்தில் அவரைக் காணோம். கதவு ஒருக்களித்திருந்தது. கடியாரம் * கர்ர்-தொண்டையைச் சரிப்படுத்திக்கொண்டு, ஒன்று: அடித்தது. உபாதையோ என அதற்குரிய வேளை தாண்டி யும் ஆசாமி தென்படாதிருக்கவே, அவளைப் பீதி பிடித்துக் கொண்டது. வீடு சற்று ஒதுக்கம். அதில் அவர்கள் தனி. இதற்குத்தான் பயப்படுவது என்று இன்னும் நிர்ணயமாகாத புதுக: எழுந்து வெளியே எட்டிப்பார்த்தாள். ஆபிஸ் அறையில் வெளிச்சம். இந்த நேரத்தில்-"பக்", ஆனால் அவள் கபாவத்திலேயே கொஞ்சம் துணிச்சல்காரி. தவிர, வயதாகிக் கலியானத்தின் விளைவு, சில பயங்கள் அறவே தெளிந்து விடுமோ? திட்டத்தை வரவழைத்துக்கொண்டு சுவரோரம் ஒட்டியவண்ணமே நகர்ந்து நகர்ந்து வெளிச்சத்தை நெருங்கி எட்டிப் பார்த்தாள். அவள் கணவன், மேஜை விளக்கொளியில் காகிதக் கட்டு களில் ஆழ்ந்திருந்தார். 'யாரோ, ஏதோன்னு பயந்துட்டேன். உங்கள் உத்யோகத்துக்கு வேளை கிடையாதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/111&oldid=798810" இலிருந்து மீள்விக்கப்பட்டது