பக்கம்:நேசம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108லா. ச. ராமாமிர்தம்


அல்லது தனி அறையில் தூங்கிக்கொண்டு இருக்கலாம். அல்ல-கேஸ் நிமித்தம் வெளியூர் போயிருக்கலாம். வருவார், போவார். எங்கே? என்ன்? எப்போ திரும்பு வேள்?' போகப் போக அந்த ஆவல். கவலையெல்லாம் தனிந்து, எழாமலும் போய்விடுமோ என்னவோ? எனக்கு மாத்திரமா, எல்லாருக்குமே அப்படித்தானா? பெருமூச் செறிந்தாள். பூக்களில் சில நள்ளிரவில் பூக்கின்றன. சில விடிவேளை, நிலவின் தேசல் போல், புன்னகையின் தேசல் ஒளி தோன்றிய மிரட்சி, ஒளிந்துகொள்ள, கன்னங்களில் இடம் § < تي يعي و مير في } தேடிற்று: ஆர்மோனியம் பழுதல்ல. மாறாத ஏக்கத்தின் நோக் காடில் இதயத்தின் மோனத் தந்திகளின் அதிர்வு, முகில்கள் பாறைகளின் பின் ஒதுங்கு கின்றன அல்லது படலங்கள் பாறைகளின் மீது கவிகின்றன. சில தவழ்கின்றன. சில தேங்குகின்றன. அது போலும், இந்த பூத்தி மனங்கள் எங்கு தங்குகின்றன? பதுங்குகின்றன: நிர்ணயமாகச் சொல்ல முடியுமோ? "கங்கள் புரியும் கவிதையை அவள் கன்யாகுமரியில் கண்டிருக்கிறாள். . பழகப் பழகத்தானே தெரிகிறது. மனுஷன் அப்பட்டத் தங்கம், புண்ணியம், சுவாமி தரிசனம் என்கிற பேரில் யாரும் தேடும் இடமாற்றம், இடமாற்றத்தால் மனமாற்றம் கன் மாற்றத்தில் பொழுது போக்குக்குத் தடையோ, குறையோ செலவுகளுக்குக் கட்டுப்பாடு, பணத்துக்குத் தட்டுப்பாடு: 'ஏன், எப்படி, எதற்கு கணக்குகள் அசதி மறதியாகக்கூட கேட்கனுமே கிடையாது. கூடவரனுமா, சரி. தனியா போறயா சரி. எப்பவும் வாசம் நிறைந்த சம்பாஷணை நல்வி எடுப்பான தோற்றம். வாசலில் இருவரும் சேர்ந்துபோனால், எல்லாரும் திரும்பிப் பார்க்கும் ஜோடிதான், ஆயினும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/114&oldid=1403565" இலிருந்து மீள்விக்கப்பட்டது