பக்கம்:நேசம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்வி113


காலை என்னை முட்டித் தள்ளிடிச்சு, மல்லார விளுந்து. டேன். மறுபடியும் காலைத் துர்க்கிட்டுப் பாய வந்தது. அப் பிடியே உருண்டு எளுந்து ஓடினேனோ புளைச்சேன். இல்லே சொல்லாத இடத்துலே முட்டி, இந்த நேரத்துக்குக் குடிசை வாசல்லே தப்பட்டை காச்சிட்டிருப்பானுங்க.” கண்ணைச் சிமிட்டினான். அது அவனைப் பார்வையாகப் பார்த்தது. அந்த ஆண் அலட்சியம் அவளுக்கு அடிவயிறு பகிர் என்றது. தீர்த்துக் கொள்ளமுடியாத சீற்றத்தின் உரு. முறுக்கேறிய கொம்பு கள் பிச்சுவாப்போல் வளைந்து நுனி கூர்ந்து நீண்டன. கண் தழல், கங்குகள் திடீர் திடீர் சிந்திற்று. பூவரசுக் கிளையைத் தானே எட்ட ஒருமுறை முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு பின்னங்கால்களில் நின்றதும், உயரம் கிழவன் காதுக்குமேல் வந்தது. ஏதோ நுண்ணிய வாத்யம் வாசிப்பது போல் உதடுகள் நாஸுக்காக அசைந்தன. கீழேயிறங்கி ஒருமுறை கனைத்தது. அவள் அடிவயிறில் இடி உருண்டது. இது இந்தப் பக்கத்து ஜாதியில்லே. ஆளப் பிறந்ததுதான். எனக்கு ஆடு குறைஞ்சிட்டு வருது. வயித்துக் கொடுமை-ரெண்டு வித்தேன். ரெண்டு காணாமே போச்சு. ஒண்னு ஆக்கித் தின்னுட்டேன். அப்புறம் என்ன செய்ய நீயே சொல்லு'-மரியாதைகூட கிடையாது. பொலியா வாங்கிட்டேன். மறுபடியும் அந்த ஆபாசமான கண் ஒயிட்டல், ஒரு அம்பது குவா முன் பணம் கொடேன். இதுமேலே பாக்கி நிக்கிது. சம்பளத்துலே மாதம் புடிச்கக்கோ.” அவனை அறையலாமா என்று வந்தது. தொட்டால் கையில் கலம் பிசுக்கு ஒட்டிக்கும். பதிலே பேசாமல் திரும்பி விசுக்கென உள்ளே நடந்தாள். நே.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/119&oldid=1403570" இலிருந்து மீள்விக்கப்பட்டது