பக்கம்:நேசம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6லா. ச. ராமாமிர்தம்


总 லா, ச. ராமாமிர்தம் ஆனால் நேரத்துக்குப் பொட்டு வைக்கும் அந்த வேளை அதுமட்டும் நமக்குப் பங்கு கிடையாது. அதுமட்டும் அவளுக் குத்தான் சொந்தம். நேர்வதை நாம் பார்க்க முடியாது. ஆனால் தேர்ந்தபின் உணரலாம். கொடுப்பனை அதற்கும் இருந்தால், இருந்தாற்போலிருந்து அகில், மட்டிப்பால் கற்பூரம். சந்தனம், பவழமல்லி மனம் சூழ்ந்துகொண்டது. உள்ளங் கையை முகர்ந்துகொண்டார். தாழம்பூ கமகம்......உடலி லிருந்தா? பயமாயிருந்தது கண்ணுக்குக் கட்டுப் போட்டதால மட்டும் முழு இருள் கிட்டிவிடவில்லை. அற்ப சத்தங்களுக்கும் இமை திறந்து கொள்ளும் பழக்கத்தை கண்கட்டுக்குள் கட்டுப்படுத்தலாம். செவிக்குப் பஞ்சடைத்ததனால் மட்டும், கேட்காமல் இல்லே வம்புப் பேச்சை ஒட்டுக் கேட்பதில் இருந்து அவ்வப் போது முடிந்தவரை செவியை மீட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான். பிள்ளையாண்டான் ஏசிக் காட்டினாற் போல், இதெல்லாம் புலனடக்கம் ஆகிவிடுமா? என்னவோ இருளில், தடவித் தடவித் தேடுகிறோம், இருளையே தானோ? என்னால் முடிந்தது இவ்வளவுதான் ஜன்மங்கள் தான் இருக்கின்றனவே, இதற்குத்தானா இருக்கின்றன: 'கலியுகத்தில் முழு ஆர்வத்துடன் மூனுநாள் தேடி னால் போதும், பகவான் தரிசனமாகக் காத்துக் கொண்டிருக் கிறார்’ என்று பரமஹம்சர் உத்தரவாதம் சொல்கிறார். 'நான் யார்? இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்த வுடனே விடிவு கண்டுவிட்டாய்” என்று ரமண பகவான் சொல்கிறார். அவர்கள் மஹான்கள், சாத்தியமாகாததை அவர்கள் செய்யச் சொல்லவில்லை. அவர்களால் செய்ய முடிந்ததை, அவர்களுடைய எல்லையற்ற கிருபையால் அருள்கிறாங்க ள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/12&oldid=1403435" இலிருந்து மீள்விக்கப்பட்டது