பக்கம்:நேசம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114லா. ச. ராமாமிர்தம்


"இதென்னடாப்பா இம்மா கோவம் வருதே' அவன் குரலின் ஏளனம் அவளை இரக்கமற்றுத் துரத்திற்று. "ஒன் புள்ளையே என்ன கிணத்துலே துக்கிப் போட்டுட்டேனா?’’ குருக்கள் மலர்களைப் பறித்துக்கொண்டிருக்கிறார். லிங்கத்தின் மண்டைபோலவே விழித்துக்கொண்டு எழுந்த நெற்றியில் பட்டை பட்டையா விபூதி, செம்பருத்தி, நந்தியா வட்டை, காசித்தும்பை, பொன்னரளி, கதிர்ப்பச்சை... தனிந்த மூட்டத்தில் அணையப்போட்ட பால், படிப்படி யாக, மெதுவாகப் பொங்கியெழுவதுபோல், குடலை படிப் படியாக நிரம்பிக்கொண்டே வந்தது. அவளைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது. குடலை யிலிருந்து சட்டென எதையோ எடுத்து அவளிடம் கொடுத்தார். 'கொடியிலேயே பழுத்து, தானே விழுந்திருக்கு, ரொம்ப விசேஷம்தான்." பாகற்காய். "ஏன் குருக்களே. கோவிலுக்குத்தானேன்னு பறிச்சுக்க இடம்கொடுத்தால் இப்படித்தான் மொட்டையடிக்கிறதா? குடலை இன்னும் பெரிசா கிடைக்கல்லே?" கேட்டுக்கொண்டே விடுவிடென நடந்து, குறுக்கே பப்பளபளவென வேலைக்காரி தேய்த்து வைத்திருந்த பாத்திரங்களை ஒரு உதைவிட்டுத் தள்ளி உள்ளே சென்று தடாலென்று கட்டிலில் குப்புற விழுந்தாள். பிறகு நேரம் போனதே தெரியவில்லை. உள்ளங்கையில் ஈரக் கசகசப்பு உணர்ந்து திறந்து பார்த் தால் பாகற்காய் சதையுரிந்து நகத்ர மீனாய் நகங்ஒத் கிடந்தது. சதையின் உள்பக்கம் ஜெவ ஜெவவென் று ஒரே ரத்தச் சிவப்பு. அதில் ஒட்டிக்கொண்டிருந்த ஐந்தாறு விதைகள், பவழங்கள் உறங்கிக்கொண்டிருந்தன. εξ/53) ολέ விழித்தெழுந்தால்...விழித்தெழுந்தால்...என்னவாகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/120&oldid=1403571" இலிருந்து மீள்விக்கப்பட்டது