பக்கம்:நேசம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116லா. ச. ராமாமிர்தம்


ஒரு பிரம்மாண்டமான பாகற்காய் சுளை பிரிந்து சூர்யோதயமாக விரிந்தது. பவழங்கள் பொல பொலவென சூர்யனிலிருந்து உதிர்ந்து விதை விழுந்த இடங்களில், வாழைக்கன்றுகள் முளைத்தன. இமை நேரத்தில் மரங் கனாகி, இலைகளுக்குப் பதில் நடுத்தண்டிலிருந்து முதுக் கேறிய பிச்சுவாக்கள். நீண்டு கூர்ந்த நுனிகள்-முளைத்தன. அவைகளிடையே தள்ளி குலையில் தார் தாராக ஆட்டுத் தலைகள். அவளைப் பார்த்து, தனித்தனியாக, சேர்ந்து, கக்கடகடவெனச் சிரித்தன, கனைத்தன. அந்த சத்தத்தில் வேடுக்கென விழித்துக்கொண்டாள். கும்'மிருட்டு. மலர்களில் சில நள்ளிரவில் பூக்,. இல்லை, இல்லை; இந்தச் சமயம் அந்தப் பல்லவி இல்லை. குடலைக் குமட்டும் ஒரு வாடை. ஜன்னலிலிருந்து அலை மோதிற்று. மயக்கமே வந்துவிடும்போல் இருந்தது. செடிகளிடையே, அதுவும் அந்தக் கறிவேப்பிலைக் கன்று. பக்கம் ஒரு சலசலப்பு, வாசல் கேட் பாப்ராஸ். பயம் தோன்றவில்லை. விறுவிறுவென உடல் பூரா ஒரு பயங்கர மகிழ்ச்சி, ஸ்கிக்க முடியாத மகிழ்ச்சி. இப்போ என்ன செய்யலாம் சுற்று முற்றும் பார்த்தாள். ஆ, நினைவு. வந்துவிட்டது. நேரே ஆபீஸ் அறைக்குச் சென்று மூலையில் சார்த்தி விருந்த தடியை எடுத்துக்கொண்டாள். கொண்டைப் பிடி தடி, துணியில் இரும்புப் பூண். காமகனம். யாரோ கட்சிக்காரன் விட்டுவிட்டுப் போய், விட்டான். 'என்ன செட்டியார்வாள், சமத்தியாயிருக்கே!” என்று பேச்சுவாக்கில் வேடிக்கையாகச் சோல்லப்போக, சொல்லச் சொல்ல வேண்டாப் பொருளை மூலையில் சார்த்திவிட்டுப் போய்விட்டான். அன்றிலிருந்து, சார்த்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/122&oldid=1403573" இலிருந்து மீள்விக்கப்பட்டது