பக்கம்:நேசம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120லா. ச. ராமாமிர்தம்


மாக விலையேற்றம், வரியேற்றம் எனச் சொல்லும்படி யில்லை. நாளும் நாடும் வளமிக்கதோடன்றி, அகோ வாரும் பிள்ளாய் மதியூக மந்திரியே, மாத மும்மாரி பெய்கிறதா? மக்கள் ஆறில் ஒரு பங்கு வரி செலுத்துகின்றனரா? எனும் கேள்விக்குப் பதிலுடன் அரசு திருப்தி அடைந்துவிட்டது.

பிறகு ராணி வந்தாள், வந்தபோதும் ராஜகுமாரியாகத் தான் வந்தான்-பின் எப்படி? ராஜகுமாரன் மனைவி ராஜ கு:சரி.

ராஜாவுக்கு வயது எழுபது ஆனாலும் கழுந்து மாதிரி யிருந்தார், குத்தினால் கை எகிறிற்று கல் சதை கெட்டிப் பல். கட்டுப்பல் அல்ல .

இன்னும் இருபத்தி அஞ்சு வருட ஆட்சிக்குப் பஞ்ச மில்லை என்று பார்த்தவர் முகஸ்துதிக்குச் சோன்னாலும் சரி, எரிச்சலில் சோன்னாலும் சரி, உண்மை அதுதான்.

ஒருநாள் சபைக்கு ஒரு சாமியார் வந்தார், அவதூதர். தரை புரண்ட சடையும் தாடியும் முடிந்தவரை மானங் காத்தன. முடியாவிட்டாலும் அவருக்கு அக்கறை என்ன? உடல் குளிகண்டு எந்நாள் ஆச்சுதோ?

வந்தார். வந்து, அரசன் பக்கலில் வீற்றிருந்த அரசிளங் குமரனைப் பார்த்து, தன் ஆள்காட்டி விரலைக் கொக்கி வளைத்ததும் ராஜகுமாரன் துரண்டில் வாய் மீன்போல், அப்பவே, அப்படியே எழுந்து பின்தொடர்ந்து போய் விட்டான்.

யாரேனும் எழுந்து தடுக்க தில் லைப் பின்னால் தேடலாம். அசைக்கக் கை கால் வேண்டாமா? அத்தனை பேரும் கல்.

போனவன் போனான்டி ஒரு பாட்டு இருக்கு அல்ல?

காணாமல் போய், ஏழு வருடங்கள் கழித்துத் திரும்பி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/126&oldid=1403576" இலிருந்து மீள்விக்கப்பட்டது