பக்கம்:நேசம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி121


பிரிவாற்றாமையில் படுத்துவிட்ட ராஜாவுக்கு, மகனைத் திரும்பக் கண்ட சந்தோஷத்தில் மார் வெடித்துவிட்டது .

ராஜகுமாரன் ராஜாவானான்.

ராஜகுமாரியும் ராணி ஆனாள். ஆகவேண்டியதுதானே! ராஜா மனைவி ராணி.

தன் ராஜா வரும் வரை ராஜகுமாரி, புக்ககத்தில்தான் இருந்தாள் பட்டம் மாமனார் படுக்கையில் ஆட்சி அவளு டையது விலையேற்றம், வரியேற்றம், அவசரச் சட்டம்: அவசரத் தீர்ப்பு, அப்பீலுக்கு நேரம் கொடுக்காமல் தண் உனையின் அவசர நிறைவேற்றம்-ப்ரஜைகள் முதன் முறையாக என்னவென்று உணர்ந்தார்கள். சுவை கணக்கு முன் ராஜா வந்துவிட்டாரே!

புருஷன் திரும்பி வந்ததால் சமுதாயத்தில் தன் அந்தஸ்தை மீண்டும் பெற்றதில் சந்தோஷம்தான். (வாழா வெட்டி, தாலியிறங்காக் கைம்பெண் பட்டம் யாருக்கு வேண்டியிருக்கும்?) ஆனாலும் ஆட்சியைக் கணவரிடம்உரியவரே ஆ னா லு ம்-ஒப்படைக்கச் சந்தோஷமாயி ருந்ததோ? அப்பாடா, வந்தேளோ! எனக்கு ராஜ்ய பாரம் விட்டதென்று ஒப்புக்குச் சொல்லிக்கக்கூட நா எழவில்லை. ருசி கண்ட பூனையின் ஏக்கம் அவளைக் குடிகொண்டது. பூனை, வளர்த்தவனை மறந்துவிடும். குடிகொண்ட இடத்தை விடாது.

ராஜா ஆவதற்கென்றே திரும்பி வந்த ராஜகுமாரன். ராஜாவான பிறகு , ஏன், திரும்பி வந்ததிலிருந்தே பழையபடி இல்லை. ராஜ ரிஷியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதிலும் ராஜாவைக் காட்டிலும் ரிஷி கூட என்றால் மிகையாகாது.

நன்றாய்த்தான் பேசினார், சிரித்தார், பழகினார். மக்களுக்கு ஏழு ஆண்டுகளாகக் கழுத்தை அழுத்திக்கொண் டிருந்த நுகத்தடி இறங்கியதே ஒரு புது அனுபவமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/127&oldid=1403578" இலிருந்து மீள்விக்கப்பட்டது