பக்கம்:நேசம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி123


நான் வேறு யாரையும் நினைத்ததுகூட இல்லை-’’ என்றால், என்றிருந்தால், உண்மையே நவின்றாள். ஆனால் அப்படிச் சொன்னாளா, இல்லையா, படுக்கையறையில்பார் கண்டது? இருந்தாலும் ராணி நெஞ்சு முள்ளில் ஏதோ சிலாம்பு இடறிற்று. அதுதான் ருசி கண்ட பூனையின் "மியால் மியாவ் பூனைப் பசி. திருட்டுப் பசி. பால் பசி. திருட்டுப் பால் பசி, ஒயாப் பசி. கணவன் மேல் அவளுடைய அன்பு நேரங்கள் திடீரென அதிகரித்தன. அவைகளுக்கு அவருடைய ஈடுகொடலும் அவளுக்குக் குறையாமல் இருந்தது. ஆனால் அவைகளில், அவள் அவரிடம் தூண்டிவிட முயன்ற வெறி, அந்த வெறியில் அவள் நாடிய ஏமாந்த நேரங்கள் அவளுக்குக் கிடைக்க வில்லை. கைகேசி ஆயினும் ஏற்கெனவே தனக்குக் கடன் பட்டிருந்த வரங்களைத்தான் கேட்டாள். அதற்கும் வழி இங்கில்லையே! ஆயினும் ஆசை விடுகிறதா? அதுபோன்ற லாஹஸ் சமயங்களில் ஒரு சமயம் வாய் விட்டே கேட்டுவிட்டாள்: 'கிரீடம் உங்களுக்கு அழகாயிருக்கிறது. உங்கள் அப்பா வைக் காட்டிலும் உங்களுக்கே பொருத்தமாக இருக்கிறது. அதை நீங்கள் அணிந்துகொண்டேயிருக்க வேணும்.' கட்டிலின் பக்கலில், சிற்ப வேலை மலிந்து நின்ற வட்ட மேஜை மேல், பெரிய வெள்ளிப் பேலாவில் புலுபுலு பொங்கி வழிந்த கறுப்புத் திராகைக் கொத்திலிருந்து இரண்டு பழங்கள் பறித்து ராஜா வாயில் போட்டுக்கொண்டார். அவர் விழிகள் திராrை போன்றே பளபளத்தன. g "நாதா- s -இங்கே சற்று நேரம் ஆயக்கால் போட்டுக்கொள் கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/129&oldid=1403581" இலிருந்து மீள்விக்கப்பட்டது