பக்கம்:நேசம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனகை7


ஆனால் புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்ட கதைதான். இதென்ன விளக்கு அ ைண ந் த து ம் எம்.எம். ஆ லாட்டரி சீட்டா? ஏ மடையா, நீ உன் விமோசனத்தைத் தேடுகிறாய், ஞாபகமிருக்கட்டும். அரை மயக்கம். ஆள்மேலே வந்தது தெரியவில்லை. நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டதுதான் தெரிந்தது. "நான்தாம்பா. கங்கிராஜுலேஷன்ஸ் கிட்டிக்கிட்டி நாளைக்கு சரஸ்வதி பூஜையும் வந்தாச்சு. விஜயதசமி அன்றைக்கு, கிராண்ட்மெளத் ஒபனிங் டு ஸ்பீச் செர்மனி யாக்கும்! வாதமோ, வீம்போ நடந்தவரைக்கும் பெரிசுதான். கொஞ்சநேரம் உங்களோடு பேசனும் பேசத்தான் வந்திருக் கேன் சமயம்தான் தனியாக இதுவரை அமையவில்லை. அப்பா, மனம்விட்டுப் பேச நீங்கள் சுயேச்சை கொடுத் திருக்கிறீர்கள். நீங்கள் கொஞ்சம் அட்வான்ஸ்ட் டைப்தான். அப்பா, நீங்கள் கொடுத்திருக்கும் சலுகையை நான் மீறியிருக் ஆலாம், மீறியிருக்கிறேன், எனக்கே தெரியும், ஆனால் ப்ராய்ட் சொல்றான், இல்லை சொல்றானாம், அது ப்ராய்டா? ஜங் ஆ, ஹேவ்லக் எல்லிஸ் ஆசீ எனக்குத் தெரியாது. எல்லாம் பெயர்கள். ஆனால் இந்தப் பெயர் களைச் சொல்லிக்கொள்ளாவிட்டால் என்னைப் படித்தவ னோடு சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். இப்படியெல்லாம் உங்களுக்குத் தோணறதே. இதெல்லாமும் செக்ஸ் தூண்டுதல் தானாம். விந்துவின் தத்தளிப்பு என்ன செய்து என்ன , இன்ஸ்பிரிட், மேன் இஸ் ஏ டெரிபில் லோன்லி க்ரீச்சர், உமன் இஸ் நாட், இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் அப்பா. நான் ஒரு சின்னத் தப்புக் காரியம் பண்ணிட்டேன். உங்கள் செக் ரூ. 0ே8-க்கு என் கணக்கில் கட்டிண்டிருக்கேன். இன்னிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/13&oldid=1403437" இலிருந்து மீள்விக்கப்பட்டது