பக்கம்:நேசம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124லா. ச. ராமாமிர்தம்


விதை ராமனை 'ஆர்ய என விளித்தாள். புத்தகங்களில், கல்யாணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் "அத்தான்!” என்று அழைக்கப் படிக்கிறோம். அந்தணக் குடும்பங்களில் 'ஏன்னா? உங்களைத்தானே!" அந்தணரல்லாதார் 'தே, ஏ புள்ளே!’ பேரைச் சொல்லாமலே ஹல்லோ, ஹல்லோ என் ாைங்க?" இது ஒரு பாணி. இன்னும் முன்னேறிவிட்ட இடங்களில் Mr. ஹரி நாம்!" * ‘Yes Loiita dariirig இந்தக் கதை நடக்கும் காலம் எனக்குத் தெரியாது. எதற்கும் நாதா என்று போட்டு வைத்தேன். எதற்கும் பத்திரம் அதுதான். தவிர, மாயா வினோதக் கதை சரித்ர நிரூபனை தேவையில்லை. இப்பவும் எங்கேனும் காலத்துக் கேற்ற ரூபத்தில் நடந்துகொண்டிருக்கும். நாதா! செங்கோலை மட்டும் என்னிடம் கொடுத்துப் பாருங்களேன்! எனக்குப் பொழுதே போகமாட்டேன் கிறது!" ராஜா பதிலே பேசவில்லை. புன்னகை பூத்தார். மேல் வரிசையில் முன் பற்கள் இரண்டு மட்டும் லேசாகத் தெரிந்தன. அவளுடைய இப்ரமையா? நிஜம்தானா? எல்லோரையும்போல் சதுரமாக இருப்பதற்குப் பதிலாக அம்புத் தலைபோல் துணி கூரிட்டிருந்தன. அந்தப் புன் சிரிப்பில் ஒரு பதில் மட்டுமல்ல. சொல்லாத பதில்கள்தான் எப்பவுமே கூட அச்சம் தரும் பதில்கள். அத்துடன் அவர் ஒருமுறை மேல் உதட்டை நக்கிக்கொண்டதும் வேறு எதுவோ ஞாபகம் வந்தது. வந்ததை மறக்க முயன்றாள். உள்ளங்கையுள் அடங்குகிற மாதிரி ஒரு புத்தகம். அதன் பக்கங்களுள் அடையாளத்துக்கு நொழுந்திய ஒரு விரல் அந்த ஒரு புத்தகம். ஒரே புத்தகம்தான். அதே புத்தகம்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/130&oldid=1403582" இலிருந்து மீள்விக்கப்பட்டது