பக்கம்:நேசம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி125


விழித்திருக்கையில் கையுள் இரவு வேளை தலையணை கீழ், அப்படி அடைகாக்க அதில் என்ன? அவளுக்கு எரிச்சலாய்க் கூட வந்தது ஒரு இரவு அவர் உபாதைக்கு வெளியே சென்ற சமயம் தலையணை கீழிருந்து அவசரமாகப் புரட்டிப் கார்த் தாள். அத்தனையும் வெற்றுப் பக்கங்கள். ஒருமுறை கண்ணைக் கசக்கிக் கொண்டாள். பக்கங்கள் வெறிச்சோ தான். ஒன்றுமே புரியவில்லை. திரும்பி வரும் அரவம் கேட்டு, எடுத்த இடத்துக்கு எடுத்ததைத் திருப்பிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள். நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கெளரவமா? பயமா? ஒன்றுமே புரியவில்லை. பிறகு ஒருநாள் நந்தவனத்தில், கதை சம்பிரதாயம் கோணாமல் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு காக்கை அடன் அவர் பேசிக்கொண்டிருக்கக் கண்டாள். அண்டங் காக்கை, பூவரசங் கிளைமேல் அமர்ந்த வண்ணம் 'கா-கா -கர் கர்' என்றது. இவர் பக்தியுடன் கைகட்டிக் கீழே நின்றபடி கர்ர்"ருக்கும் 'கா'வுக்கும் ஆமாம்; இல்லை; சரி; அப்படியே என்கிற முறையில் தலையை ஆட்டிக்கொண்டிருக் இறது. என்ன நடக்கிறது? நிச்சயம் சம்பாஷணைதான். அவர்கள் அல்ல அவைகளா?-தன்னைப் பார்க்குமுன்னர் பின்னுக்கு வாங்கினாள். அன்றிலிருந்தே அவள் அவருக்குப் பின்வாங்கல்தான் , அவசியமான பேச்சோடு சரி. நாளா வட்டத்தில் தன் படுக்கையை வேறு அறைக்கு மாற்றிக்கொண்டாள். இனி அவளுக்கு அ :ள் பிள்ளைதான் துணை. அதற்கும் அவர் ஏன் என்று கேட்டுக்கொள்ளவில்லை. "ஆம்" என மாட்டான். 'உம்' என மாட்டான். ஊஹாம்" எனவும் மாட்டான். ஆனால் ஆளப்பிறந்தவன். தனிப் பாதை மனிதன். அவள் ஆசைகள், குறிக்கோள், எல்லாம் மகன்மேல் திரும்பின. முயற்சி பூராவும் அப்பன் மகனை, அம்மா பிள்ளையாக மாற்றுவதில் முடிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/131&oldid=1403583" இலிருந்து மீள்விக்கப்பட்டது