பக்கம்:நேசம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி127


பெற்றோரின் உட்பகை பையனைப் பாதிக்காமல் இருக்குமா? கு ழ ந் ைத ப் பிராயத்தினில் தந்தையின் தோளிலும் மடியிலும் கன்னத்துடன் கன்னம் சேர்த்த கொஞ்சலிலும் ("அப்பா? தாடி சொர சொரங்கறதே! ) தன் பங்கு தவறிப் போன தவிப்பு, வெந்நீரூற்றுக் கரைமேல் செடிபோல் வெதும்பல். வெளித் தோற்றத்திலேயே வயதுக்கு மீறிய வாட்டம் உள் புகைச்சலில் விழியோரங்களில் நிரந்தரச் சிவப்பு நரம்புக் கொடி. வாயில் கடுப்பு. இந்த அடையாளங்களின்றி, அவனே தன்னை முகம் பார்க்கும் கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிாது. அவன் தந்தையின் பாதை எங்கேயோ பிரிந்து போயாச்சு. மெளனம் அவரை மலைப் பாம்புபோல் தன் ஆலிங்கனத்தில் குழைத்து படிப்படியாக விழுங்கிக்கொண் டிருந்தது. நாள் கணக்கில் உணவைத் தொடர்ந்துத் துறந்தார். மாதக் கணக்கில் அவர் அறைக் கதவு அடைத்துக் கிடக்கும். எப்போது வெளியே புறப்பட்டார்? அரசு அலுவல் களை எப்படி எப்போது கவனித்தார்? பத்திரங்கள், அதிகா ரங்கள் எப்போது ராஜமுத்திரையை வாங்கிக்கொண்டன: கேள்விகள் நம்முடையது. பதில் அவருடையது. அதுவும் ஒரே பதில் செயலே பதில். ஆட்சி, மாட்சி குறையின்றி நடைபெற்றன. இந்தப் பதினைந்து வருடங்களில் ராணிக்கு நெற்றிப் பொட்டில் அடை நரை கண்டது. பாவம், அவள் கவலை அவளுக்கு. அவள் வதங்க வதங்க அவர் மேனியாகிக்கொண்டு வரும் மர்மமென்ன? இத்தனைக்கும் இத்தனை மெய் வருத்தல் நடுவில்! சில சமயங்களில் இன்னதென்று விரல் வைத்துச் சொல்ல இயலாத பரிமீளங்கள் உடலினின்று வீசின. பூசிக்கொள்ளாமலே எப்படி வந்தன? எந்தது கணப்பில் இந்தத் தகதகப்பு? மாலை வேளையில, நந்தவனத்தில் சுற்றி வருகையில், சோலையழகுடன் வானத்தின் வர்ண ஜாலங்களின் கலவியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/133&oldid=1403585" இலிருந்து மீள்விக்கப்பட்டது