பக்கம்:நேசம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128லா. ச. ராமாமிர்தம்


நேர்ந்த மன மயக்கத்தில் ராணி நினைப்பாள்: "என் அவசரத் தில் காயைக் கடித்த கசப்பில் கனியை ஏமாந்தேனோ?” ஆனால் இது ஒருகண நேர மயக்கம்தான். பச்சாதாடங்கள் அவள் இயல்பில் அல்ல, ஜலத்தின்மேல் லேசாகக் காற்றின் விதிர் விதிர்ப்பு அவள் பிள்ளை மனதின் முழு நஞ்சாக்கம் தான் அவள் குறிக்கோள். ராஜகுமாரன், வேட்டைக்குப் போன இடத்தில் ஒரு வேட குமாரிமேல் காதல் கோண்டு அரச நியாயத்தில் கந்தர்வு மனம் கொண்டு கைகோடு அரண்மனைக்கு. அழைத்தும் வந்துவிட்டான். ராணி கூந்தலில் நரை ஆறாய் ஒடிற்று. என்றேனும் ஒருநாள் போட்டிக்கு ஒரு சிறுக்கி வரப்போகிறவள்தான். ஆசைப்பட்ட பொம்மையுடன் கொஞ்ச காலம் விளையாட வேண்டியதுதான். அது கை தவறிக் கீழே விழுந்து தானாக உடையாவிட்டால் பொட்டேன்று கீழே போட்டு உடைத் கவும் வேண்டியதுதான்; அது அதுக்குக் காலக் கிரமம் என்று உண்டே, நியாயம் தெரியாதவரை ராணி ஊர்ப் பிடாரியை ஒண்டவந்த பிடாரி விரட்டுவது நியாயமா? அப்படி அதுக்கு இடம் கொடுக்கலாமா? அடே இவள் இன்று வந்தவள டா: நீ என் ரத்தத்தின் ரத்திமடா! ராணி வெளியில் சொல்லவில்லை. வெளியில் சொன் னால் டயலாக்காக அத்தோடு பொரிந்து போச்சு. உள்ளேயே குமைந்தால் எரிமலை. தன் தனிமையில் ராணி நீலமானால், விஷ நீலம், தன்னறியாமை வேடகுமாரிக்கு ஒரு குழந்தைத்தனத் தைத் தந்தது. கூடவே புதுச் சூழ்நிலை அவளுக்கு அச்சத் தையும் தந்தது. அரசகுமாரனை இடுப்பில் அனைத்தபடி குதிரைமேல் அரண்மனையுள் நுழைகையிலேயே, மதிலின் கண் வைத்த வளைவுகள் அவள் கழுத்தை நெரிக்க முடங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/134&oldid=1403586" இலிருந்து மீள்விக்கப்பட்டது