பக்கம்:நேசம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி129


விரல்கள் போல் தோன்றின. அகழியில் முதலைகள் பிளந்த வாயுடன் வரவேற்றன. வானமும் வையமும், தன்னிச்சை யின் கால்வீச்சாகப் பழகிப்போனவளுக்குக் கல் கட்டிடம் சிறையெனப்பட்டது. காட்டில் ஒட்டினாற்போல் ஓங்கி வளர்ந்த ஒரு அரசு , ஒரு வேம்பின் கிளைகளின் நடுவில் கட்டிய ஒலைக் குடிசைத் திடீரென ஏக்கம் கொண்டாள். நள்ளிரவில், அடவியில், சிம்ம கர்ஜ்ஜனைக்கும், சிறுத்தை யின் தும்மலுக்கும். யானைப் பிளிறலுக்கும், கழுதைப் புலி யின் சிரிப்புக்கும் பழகிப்போன செவி, திரைமறைவிலிருந்து அவள் மனதை மயக்க, பத இழைவில் அரும் பாடுபட்ட யாழையும் தும்புருவையும் மறுத்தது. புலி நகமும் நரிப் பல்லும் பாசி மணியும் யானைத் தந்தமும் பன்றிக் கொம்புமே மதிக்கத்தக்க அணிகள் இந்தப் பொன்னும் கற்களும் யாருக்கு வேனும்? தனியாக, நதியோரம், காலாற நடந்து அப்பவே பிடித்த மீனை , அப்பவே அடித்த முயலை, மரத்தடியில் தோண்டிய பள்ளத்தில் வைக்கோலால் முடி, முட்டி, அவித்து, அங்கனே, கொழுப்பு தேனாய்க் கசியப் பிய்த்துத் தின்னும் ருசிக்கு. வெள்ளி ஏனங்களில் அரண்மனையின் உண்டிகள் ஈடாகுமா? இதுகாறும் காட்டில் இன்பமாய்க் கழித்த எந்நாட்கள் திரும்பி வருமா? தன்னையறியாமல் வெறுப்பில் நாக்கின் சூள் கொட் ட லுக்கு நாலு பணிப்பெண்கள் நான்கு மூலைகளிலிருந்து எப்படியோ தோன்றினர். ஒரு கதவைகூடத் தானாகத் திறக்க வழியின்றி ஏவலாளிகளின் பணிவிடையே, இடை விடாது தன்னைக் காணிக்கும் காவலாகக் கண்டாள். அவள் ஒரு வனவிலங்கு: கைவிலங்கினும் கொடுமை இந்தக் கண் விலங்கைத் திமிறினாள். வந்து பதினெட்டு நாட்கள்கூட ஆகவில்லை. வேட குமாரி காணாமல் போய்விட்டாள். இத்தனை காவலின் விரலிடுக்கில் எப்படி மாயமாய் மறைந்தாள்? தேடாத இட நே.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/135&oldid=1403587" இலிருந்து மீள்விக்கப்பட்டது