பக்கம்:நேசம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136லா. ச. ராமாமிர்தம்


'ஏமாந்து போய்விட்டேனோ? பதறியபடி அங்கி போர்த்த உருவம் அரசன்மேல் குனிந்தது. அரசன் விழித்துக் கொண்டான். அப்படிச் சொல்வதைக் காட்டிலும், கோழித் துயில் கலைந்த திடுக்கில் ஒவ்வொரு அங்கமும் தனித்தனியே தன் தன் செயலின் முழுமையுடன் விழித்துக்கொண்டது என்பதே பொருந்தும். இந்த விழிப்பு சுய விழிப்பல்ல. ஏற் கெனவே எச்சரிக்கையில் கூர்கண்ட உணர்வுகளின் ஒரு பங்கைப் பல பங்கு மிகைப்படுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி விழிப்பு. தலையணை அடியிலிருந்து ஒரே குத்து. பிடிவரை புதைந்த கத்தியைத் தன் மார்பிலிருந்து பிடுங்க, பிடியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டே பின்னடைந்துபோய்த் தரையில் தடாலென்று விழுந்ததும், முட்டாக்குக் கலைந்து முகம் வெளிப்பட்டது. 'அம்மா! மகன் அலறினான். அப்பவே ஊஞ்சலின் கால்மாடில், தரையில், தன் தந்தை இரு துண்டங்களாகக் கிடப்பதையும் கண்டான். ஊஹாம். கத்தியைப் பிடுங்கமுடியவில்லை. விழிகள் அவைகள் கண்ட கடைசிப் பிம்பத்தில் செருக ஆரம்பித்து விட்டன. கண்ணாடி கண்டுவிட்டது. கடைசி மூச்சின் வார்த்தைகள் அரசன் குனிந்த செவிக்கு எட்டின. - 'கணவனுக்கு மனைவி எமன். தாய்க்கு மகன் எமன் , '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/142&oldid=1403594" இலிருந்து மீள்விக்கப்பட்டது