பக்கம்:நேசம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள ஸ்நேகிதிக்கு. அமலி, ஐ லவ் யு, உனக்குத் தெரியாது. ஐ ஹேவ் ஆல்வேஸ் லவ்ட் யு. ஸானோ இதை என் தோளில் பின்னாலிருந்து படிக்கிற தென்றால் படிக்கட்டும். ஐ டோன்ட் கேர். அவளும் ரகளை மாதிரி ஜூல் காட்டுவாளே ஒழிய, வி ஆல்ஸோ டஸின்ட் கேர். எனக்குத் தெரியும் வி டோன்ட் கேர். ஏதோ சின்டாக்ஸ் படிப்பதுபோல் தமாஷா இல்லை? அன்புள்ள ஸ்தேகிதிக்கு, நீ எனக்கு வெறும் ஸ்நேகிதி தானா? ஆனால் வேறு எப்படி ஆரம்பிப்பது? 'மை டியர்லவ்" என்றே தொடங்கலாம். ஆனால் நம்மிடையில் சாரங்களை முழுக்கத்தட்டியாகவில்லை. தவிர இந்தத் தலைப்பில் கதிரில் ஒரு கதை படித்தேன். ஆகவே ஆரம்பம் சம்பிரதாயமாகவே இருக்கட்டும். அன்று ஆஸ்பத்திரியில் கண் ஆப்பரேஷன் ஆகியிருந்த என் சிநேகிதனைப் பார்க்கச் சென்ற இடத்தில் நர்ஸ் யூனிபாரத்தில் உன்னைக் கண்டபோது அதிர்ச்சி அடைத் தேன் என்று சொல்லவும் வேண்டுமா? உன் கருவிழியுள் சிறுவிழி சட்டென கண்ட சுருக்கத்தில், உன் கன்னங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/143&oldid=798876" இலிருந்து மீள்விக்கப்பட்டது