பக்கம்:நேசம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138லா. ச. ராமாமிர்தம்


ஏறிய முலாமில் நீயும் என்னை அடையாளம் கண்டுகொண் டாய் என்று கண்டேன். ஆனால் அதை நீ வெளியே காட்டிக் கொள்ள விருப்பப்படவில்லை. "ஆ" விஸ், ஹியர் ஈஸ் தி என்வலப் ஃபார் யு என் சிநேகிதன் கப்போர்ட் மேல் கண்ணாடி தம்ளர் அடியில் சுட்டிக்காட்டினான். . 'ஒ. தேங்க் யு”. அதை எடுத்து உன் யூனிஃபாரம் பையில் திணித்துக்கொண்டு. விர்ரென்று போய்விட்டாய். 'ஏய், இவள் க்ளீனா டிப்ஸ் கேக்கறாடா! கொடுத்தால் நானாக அல்லவா கொடுக்க வேண்டும்?’’ "ஹவ் வேறா?' நாளைக்கு மத்தியானம் 11 மணிக்கு உங்களை டிஸ்சார்ஜ் செய்துடுவாங்க. ஆனால் நைட் டியூட்டி முடிஞ்சு காலை 8 மணிக்கே தான் போயிடுவேன். தேங்க் யு.” அப்படின்ன வரிகளுக்கிடையே நான் படித்துக்கொள்ள வேண்டிய அர்த்தம் என்ன நீயே சொல்லு: முட்டையை உடைப்பதுபோல் என் கையிலிருந்த டார்ச்-ஆல் அவன் மண்டையில் ரெண்டு மொத்தலாம் போல் ஆத்திரம் வந்தது. நீ வாழ்ந்த வாழ்வு என்ன? நீ" வாயில் தங்க ஸ்பூனுடன் பிறந்தவள் என்பதை அந்த சோமாரி கண்டானா? ஆனால் கேட்க எனக்கு உரிமை என்ன இருக்கிறது? அவன் கொடுக்கிறான். பேசுகிறான். நீ வாங்கிக் கொள்கிறாய், குறுக்கே நான் யார் குமுறுவதோடு சரி. அமலி, மூத்திர பாட்டிலும், பெட்பேனும் தூக்கும் கதி உனக்கு ஏன்? சமூகசேவை செய்கிறாயா? ராட்! காதில் பூ சுத்தாதே, சமூக சேவை செய்பவளுக்கு டிப்ஸ் ஏன்? எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்கு என்பதுதான் உண்மை. ஆனால் ஏன்? ஏன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/144&oldid=1403595" இலிருந்து மீள்விக்கப்பட்டது