பக்கம்:நேசம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள ஸ்நேகிதிக்கு139


குந்தித் தின்னால் குன்றும் குந்துமணி ஆகும் என்கிற பழமொழியா? தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம் மக்களோடு செல்வம்போம் எனக்கு வயசாயிடுத்தோன்னோ? கொஞ்சம் பழமொழி யில் பேசுவேன். உன் விஷயத்தில் மக்களுக்கு வழியில்லை. அன்லெஸ்-அன்லெஸ்...நோ. மனம் ஒரு சாக்கடை எது எப்படி இருந்தாலும் அதைக் கேட்கவும் எனக்கு என்ன உரிமை. நல்லதையே நான் காணவேண்டும். பிகாஸ் ஐ லவ் யு உன் விஷயத்தில் தந்தையோடு செல்வம்போம் என்று: கொள்கிறேன். நாலைந்து வருடங்களுக்கு முன். உன் தகப்பனார் காலமான செய்தி பேப்பரில் வந்தது. மெப்புக்கு உனக்காக இத்தனை நாள் வளைய வந்திருக் கிறார். ஆனால் அவர் மரணத்துக்குக் காரணம் நமக்கல்லவா தெரியும் இதயவிரிசல் அம்மா முன்னாலேயே போனாளோ பிழைத்தாள் என்று நீயே பேச்சுவாக்கில் என்னிடம் சொல்லியிருக்கிறாய். அஸ்ைலம் கேஸ், பாவம் ஒரே பெண். யாருக்குத் தான் தாங்கச் சக்தியிருக்கும்? என்னென்ன ஆசையெல்லாம் வைத்திருப்பாள்? இருந்திருந்து ஒரே மகவு அதுவும் பெண். அதை மீனாக கல்யாணம் பண்ணி-பட்டணமே திரண்டது. பெண்ணையும் பிள்ளையையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த அடுத்த மாசமே பெண் பாக் அண்ட் பாகேஜ் பீரோ கட்டில், பர்னிச்சர் உள்பட திரும்பிவிட்டால் எல்லோ ருக்குமே தாங்கற சக்தி இருக்குமா? காதோடு காது வைத்த மாதிரி திரும்பினாலும் "புசுக்"கை எத்தனை நாள் அமுக்கி வைக்க முடியும்? அங்கு என்ன நடந்தது? தாய். தகப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/145&oldid=1403597" இலிருந்து மீள்விக்கப்பட்டது