பக்கம்:நேசம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனகை9


கீழே திமிலோகப்படுகிறது. இன்று கடைசி நாள். கோமதி மாமி சுண்டல் வழங்கு நாள். ஒரு பக்கம் காஸ்ட்டில் லலிதா ஸஹஸ்ரநாமம் அலறுகிறது. பாடுகிறவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். பேசுகிறவர்கள் பேசிக்கொண்டிருக் கிறார்கள். நல்ல கூட்டம்தான் போலும். ஆனால் இந்த இரைச்சல் இன்று அவ்வளவாகத் தாக்க வில்லை. உடல் கட்டிலில் கிடக்க தான் தனியாக மிதப்பது போலிருந்தது. ஒரு சுகமான லேக, குரு கிடைத்து வழி காட்டினால் எவ்வளவு பாக்கியம். அடுத்த நவராத்திரி இங்கு இல்லை. முன்பின் தெரியா குக்கிராமத்தில் அறையெடுத்துக் கொண்டு ஒருவேளை சாப்பாட்டுக்கு யாரேனும் பாட்டியம்மாளிடம் ஏற்பாடுஇது ஏதோ ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால், கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையென்று...ஒரு நல்ல காரியத்துக்கு அடையாளமே அதற்கேற்படும் தடங்கல்கன்தான். மாடியேறி வரும் பேச்சு சத்தம் கேட்கிறது! இவர்களுக்கு இங்கு என்ன வேலை அலுப்பாயிருக்கிறது. விளக்கைப் போட்டதும், கண்கட்டுக்கடியில் இமைகளில் செந்திட்டு 'இவள் என் ஸ்நேகிதி, நீங்கள் இதுமாதிரி உ வாஸம் இருக்கேள்ன்னு சொன்னதும் உங்களைப் பார்க்க ஆவல் பட்டான். அவளைவிட அவள் நாட்டுப் பெண் இன்னும் ஆவல். அமெரிக்காவிலிருந்து வந்திருக்காள்." 'ஹல்லோ!' ஆள் நெருங்கி வரும் உணர்வு லேசாக ரோஜா ஸென்ட். 'ஹெளடுயுடு; ஹெளடுயு ஃபீல்?’’ 'நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறதைக் கூட நான் அவ் வளவு பெரிசா நினைக்கல்லே. வி. கேன் மானேஜ் வித் எனர்ஜி பில்ஸ் யு நோ. திஸ் மெளன விரத்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/15&oldid=1403439" இலிருந்து மீள்விக்கப்பட்டது