பக்கம்:நேசம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள ஸ்நேகிதிக்கு145


'அப்படியானால் வி வில் ஹேவ். நீ ஒரு பேர் சொன் னாய். சர்வர் உனக்கு தனிப்புன்னகை காட்டி ஸ்பெஷல் சலாம் போட்டு பரபரப்புடன் சென்றான். உன் விழிக்குறும்பில், லேசாக உன் முகம் என் பக்கம் சாய்ந்த குனிவில் குப்! ஒ: விஷயம் இந்த அளவிற்கு முற்றிவிட்டதா? ஆந்திரா வில் ஸ்த்ரீகள் சுருட்டுப் பிடிக்கக் கண்டிருக்கிறேன். இங்கேயே சில நாகரீக மணிகள் சிகரெட் ஆனால் அமலி நீ.நீ... நீ வெறுமன சாப்பிடவா வந்தாய். எனக்கு ஏதோ எதிர் சவால் விடுகிறாய். நானும் மாட்டிக்கொண்டு விட்டேன். என் பர்வில் அன்றைய பில் பொசுங்கின பொசுங்கலிலிருந்து தேற ஒரு மாதம் பிடித்தது. "மிஸ்டர் கட்டில் துரோகம் என்று ஒன்று இருக்கிறது. முதலில் பிறவி எடுக்கிறோமே அம்மா வயிற்றிலிருந்து விழும் குழந்தை அது உயிருக்கு உலகம் இழைக்கும் துரோகம். அதிலிருந்து தேறிக்கொண்டே வந்தால் அடுத்து கட்டில் துரோகம் , ஒவ்வொன்றாய் தெளியத் தெளிய ஞானம் என்கி றோம். ஆனால் ஞானம் ஐந்து பைசா வுக்குக்கூட பிரயோசன மில்லை.” நீதான் பேசினாயா? உனக்கு இவ்வளவு புத்திசாலித் இனம் உண்டா? உன்னில் புகுந்துகொண்டிருக்கும் ஏதோ ஒன்றா? நீ போய் பார்த்து வந்த அமெரிக்கவா? அல்லது தீர்த்தமா? சங்கு தீர்த்தம், சர்வ தீர்த்தம், பாட்டில் தீர்த்தம்ட இதுபோல இன்னும் எதையுமே விட்டுக்கொடுக்காமல் இன்னதும் பெரிதும் சம்பந்தமும் அற்றதுமாய் தத்துவங்கள், அழகுகள், பேத்தல்கள் நே.வ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/151&oldid=1403603" இலிருந்து மீள்விக்கப்பட்டது