பக்கம்:நேசம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I of 60s; ஹோவியின் சாயக் குழம்பில் தோய்ந்து, தோழிகள் துரவிய வர்ணப் பொடிகள் நெற்றி, கன்னம், மார்மேடுகளில் கறைபடிய, துரத்தும் சிரிப்புக்கு ஒளிந்து, தன் சிரிப்பு காட்டி, மார்வாரிப் பெண் களவு காட்டுகிறாள். அதுபோல், சட்டென்று கண்ணுக்குப்படாமல் விதைச் சூழ்ந்த பாக்கு, தென்னை நடுவே பதுங்கி, கூரை விளிம்பு காட்டும் ஒளிவு மறைவில் ஒளிச் சிரிப்பில், வீடு பார்வைக்கு எழுந்தது. குடிசை மோஸ்தரில்-குடிசை அல்ல. கூரை ஒடுகள்-ஓடுகள் அல்ல. ஒடுபோன்று கட்டான வர்ணம் தீட்டிச் சிமிட்டியில் செதுக்கல்கள், புகைப்போக்கிபுகைப்போக்கி அல்ல. ஸ்தூபி உச்சியில், தாமரை இதழ்கள் விரிந்து உயரம் காட்டுகின்றன. மானேஜர் சற்று என் பின்னால் நின்ற இடத்தில் நின்ற வண்ணம், ஸ்தூபியின் உச்சிமேல் விரித்த இதழ்கள்மேல் பார்வை பதிந்தபடி சிந்திக்கிறார், வேதனை? கிருஷ்ணா!' இருளில் கூட்டுக்கு வழி தேடிக்கொண்டு போகும் ஒரு பருந்து போகும் வழிக்குத்துணை தன் குரலையே கொடுத்துக் கொள்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/157&oldid=798906" இலிருந்து மீள்விக்கப்பட்டது