பக்கம்:நேசம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10லா. ச. ராமாமிர்தம்


'அட ராமா, ஒரு பாவத்தையும் அறிவேனே என் னென்னவோ சொல்கிறாளே!" 6 * ** o ஸோ, இந்த ஒன்பது நாளும். நாட் ஒன்வேர்ட், நாட் ஒன் செளண்ட்ஃபிரம் யுவர் லிப்ஸ்? எங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் பேசாட்டா பயமாயிருக். கும். ஸ்டிரோக் ஏதேனும் ஆச்சோன்னு. எனிதிங்கேன் ஹேப்பன் யு நோ. யூ ஆர்கொய்ட் ஹேன் லம் யு நோ.’’ கோமதி கைகொட்டிச் சிரித்தாள். "அவருக்கு அறுபது நடக்கிறது. இன்னும் மூன்று. மாதத்தில் ரிடையர் ஆகப்போகிறார்.” "எங்களுக்கு அறுபது ஒரு வயசே இல்லை. அப்போது வாழ்க்கைக்கு ஒரு புது வேகம். எங்கள் கணிப்புகள்படி மாமா ஒரு ஹேன்ஸம்மேன் முகத்தில் அந்த போன் ஸ்ட்ரக்சர் வாலந்தி நாம் போகலாம் வா, மாமாவை, இன்னமும் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் இது அவள் மாமியார் போலும். - 'யெஸ்யெஸ், திஸ் ஈஸ் இண்டியா தட் ஈஸ் அமெரிக்கா" போயிட்டு வரோம் டேக் குட் கேர் ஆஃப் யு...ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்கோ." கீழே இறங்கிப் போகிறார்கள். கோமதிக்குப் பரம திருப்தி, என்னைக் குரங்காட்டி காட்டியாச்சு. கதவை சரி யாக மூடிக்கொண்டு போகமாட்டாள். மறதிக்கரசி. விளக்கை, அனைத்ததே பெரிசு. ஆனால் இப்போது கண்கட்டுக்குள் இமையுள் இருளில் மை கூடியிருக்கிறது. இது சுகம்தான். கர்ப்ப இருளைச் சிசு. தான் அறியும். ஆனால் அது சொல்ல முடியுமோ? புத்ர"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/16&oldid=1403440" இலிருந்து மீள்விக்கப்பட்டது