பக்கம்:நேசம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா155


நீங்கள் ஒருமுறை அழைத்தால் போதும், அனுமன் போலும் பதறி ஓடிவருவேனே. ஆனால் அந்த பாக்கியம் ஒருசமயம்கூட நீங்கள் எனக்குத் தரவில்லை ஸார். உங்க ளுடைய "தோ! தோ!'வுக்கு நாய்க்குட்டியாக இருக்க எனக்கு என்ன ஆசை தெரியுமா சொன்னால் வெட்கம். இது மாதிரியும் ஒரு ஆசை, ஒரு நிலை உண்டா? எனக்கு வேலை மட்டும் நீங்கள் தரவில்லை; என் வேளையையே திருப்பி விட்ட ராமன். அகலிகைக்கடுத்து, உங்கள் கருணையில் கல்லினின்று உயிர் பெற்றவன். ஆனால் ராமசரிதையில் இந்த ஏடுமட்டும் என் நெஞ்சில் புரளும் சுவடி. இரவு வேளைகளில் பாடப் புத்தகங்களைப் பரப்பிக் கொண்டு, விட்டுப்போன பரீrைக்குப் படிக்கிறேன்இல்லை, டப்பா அடிக்கிறேன். அர்த்தம் கேட்டுத் தெரிந்து, புரிந்து, படிக்க நேரமேது? ஸாரே சொல்கிறார். மெய்யான படிப்பு முடிந்த பின் ஆரம்பமாகிறது. நம்முடைய படிப்பு முறை அப்படியிருக்கிறது. பர்கை தேறுவதுதான் நோக்கம். எப்படியும் இந்தப் பரீrையில் டக் அடிக்காமல் தேற வேண்டும். 'அம்பி படி, படி, இப்போ பூணுாலுக்கே காலமில்லை, தெரியுமோன்னோ? அஸால்ட்டாயிருந்துட்டா ஆயுசு முழுக்க ப்யூனாகவே இருக்க தோணிடும்.' எனக்குப் பயமாயிருக்கிறது-விழுந்து விழுந்து படித் தேன். இரவில்லை, பகலில்லை உடலை, என் சக்தியைப் பந்தயக் குதிரையாக விரட்டுகிறேன். ஒருசமயம் தூக்கம் அழுத்தி, மேசைமேல், விரித்த புத்தகத்தின்மேல் முகம் கவிழ்ந்துவிட்டேன். விழிப்பு வந்த போது, என்மேல் போர்த்தியிருந்தது. ஸ்ார், நீங்களா? அல்லது நீயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/161&oldid=1403613" இலிருந்து மீள்விக்கப்பட்டது