பக்கம்:நேசம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156லா. ச. ராமாமிர்தம்


யாரைக் கேட்பது? பதில் எங்கிருந்து வரும்? வருமா? கேள்வி ஒன்றுதான். ஆனால் அதற்கு முகங்கள் ஆயிரம். ஏ காவியமே, நீ எங்கெல்லாம் ஒளிந்துகொண்டு, எதிர்பாரா வேளைகளில், பிடிபடாத நிலையிலேயே, கடைசி வரை உன்னைக் காட்டிக்கொள்கிறாய்! வெள்ளிக்கிழமை. அவர் சோபாவில், அமர்ந்தபடி, ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். நான் ஹாலில் நுழைகையிலேயே, என் கையணைப்பிலிருந்து நழுவிய ஒன்றிரண்டு பார்சல்களைத் தடுக்கப்போய், எல்லாப் பார்சல் களுமே அவர் காலடியில் விழுந்து-நானும் அவர் பாதத்தில் விழுகிறேன். "தீர்க்காயுஷ்மான்பவ: அடேடே என்னப்பா இதெல் லாம்? என்ன கைநிறைய காசு நோட்டு எல்லாம்? அவர் கையில் திணித்து மறுபடியும் நமஸ்கரிக்கிறேன். 'இன்று சம்பளதினம். என் முதல் சம்பளம் லார்-" "தீர்க்காயுஷ்மான்பவ: ஒழுங்காய் பாங்கில் ஒரு கணக்கு ஆரம்பித்து, அதில் போட்டு வைத்துக்கொள். நீ எனக்குச் சாப்பாட்டுக்கு ஒண்னும் தனியாத் தரவேண்டாம்.’’ என் விழிகள் தளும்புகின்றன. 'ஸார், எல்லாமே உங்களுடையதுதான். நீங்கள் போட்ட பிச்சைதான் . நான் உங்கள் அடிமை மாதிரி. எனக்கு அப்பா அம்மா இல்லை - தேம்பித் தேம்பி அழுகிறேன். & 3 嫁 證 உஷ் நிமிர்ந்து உட்காருகிறார். *ഖ് இப்படி உட்கார்-பரவாயில்லே, ஆபீசில் அங்கே வேஷம் வேறே’’முதுகைத் தடவிக்கொடுக்கிறார். 'இப்போ என்ன நேர்ந்துவிட்டது? நீ இப்போ சொன்ன தெல்லாம் பெருமையாயிருக்கிறது. இந்தக் காலத்தில் பெற்ற பிள்ளைகூட சொல்லமாட்டேன்கிறான். புஷ்பம், சந்தனம், ரவிக்கைத் துண்டு அமர்க்களமாயிருக்கே! ஒஹோஹோ நெய்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/162&oldid=1403614" இலிருந்து மீள்விக்கப்பட்டது