பக்கம்:நேசம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160லா. ச. ராமாமிர்தம்


மானேஜர் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரிய வில்லை. 'அம்பி, இந்த மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திண்டிருக்கேன். நீ நாயக்கரோடு போய் அவ; தோண்டின கிணறு இருக்கா பாரு, அவருக்கு யrணி சக வாசம் உண்டு. கிணறு இடம் மாறிப்போயிடும். இல்லை, இல்லாமலே டோயிடும் 密 瀏 நாயக்கர் கைகூப்புகிறார். ஐயா சொல்றதைப் பாரேன்-’’ ஒய், நீர் ஒரு தடவை கிணறையே தாச்சி போத்தி அதிலிருந்து உம்மை மீட்க, என்னை மீட்டுக்கொள்ள, நான் பட்ட பாட்டில் என் ஆயுசில் அஞ்சு வயசு கிழம் எனக்குக் கூடிப்போச்சு.' பிரம்மாண்டமான கிணறு, மோட்டார் ஒடிக்கொண் டிருக்கிறது. குபுக் குபுக் குபுக் ஜலம். குழாயின் முகவாயி னின்று நுரை கக்கிக்கொண்டு, துள்ளிக்கொண்டு, சந்தோஷ மாக, ஆனந்தமாகக் கன்றுக்குட்டியாக நாலு கால் பாவாமல் வாய்க்கால்கள் வழியே பெரும் விஸ்தீரணங்களுக்கு பாய்வதை இன்று முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக் š了虹}á "அத்தினியும் பெரிய ஐயாவின் மனசு. பெரிய ஐயாவின் மனசு இதைவிட எவ்வளவோ பெரிசு எனக்குத் தெரியும். என் பெரிய ஐயா ஒரு அம்சம்." நாயக்கர் பக்தியுடன் இளநீர் சீவிக் கொடுக்கிறார். அப்பா அந்த இளநீரின் லேசான வெண்மையையும் அற்புத மான இனிப்பையும் அடுத்தாற்போல் எடுத்துக்கொடுத்த வுடன் உள்ளங்கையில் சுருளும் அந்த வழுக்கையும் 'அம்பி வீட்டில் இதைப் பற்றிப் பேச்சே எடுக்காதே. வயிற்று அல்சருக்குக் குடித்தேன் என்று என்னையே ஏமாற்றிக்கொள்கிறேன். ஆமாம், அல்சருக்கு நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/166&oldid=1403618" இலிருந்து மீள்விக்கப்பட்டது