பக்கம்:நேசம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா161


கூடவே டயபடிசுக்கு எமனாச்சே! அம்பி, என் வயிற்றில் நவக்ரஹங்கள் ஆராதனை பண்ணாமலே பூரண கும்பத்தில் ஆவாஹனம் ஆகியிருக்கின்றன. என்ன செய்வேன்?" டாக்வி வீடு திரும்பும் வழியில் நாயக்கரின் வேண்டுதல், கெஞ்சுதலுக்கு இணங்கி அவர் வீட்டு வாசலில் நிற்கிறது. "ஒரு நிமிசம் உள்ளே வந்து வாசலை மிதிச்சுட்டுப் போங்க! அடுத்த தடவை வரை எனக்குத் தாங்கட்டும்.’’ கற்றுக்கொள்ளாமலே இவர்கள் எப்படிக் கவிதை பேசு இறார்கள்? 'ஐயா, வாங்க வாங்க!'-ஒரு ஆட்டுக் கல் நடந்து வருகிறது. 'ஐயா குழந்தை, ஐயா வாங்க.' ரவிக்கை இல்லை. அவள் பூட்டியிருக்கும் நகைகளைப் பார்த்தால், எனக்குக் கழுத்து கடுக்கிறது. தோடு தொங்கும் இழுப்பில் காது எப்போ அறுந்து விழுமோ? கூடத்தில் கட்டிவில் குவிந்திருந்த துணிகளை அப்புறம் படுத்தி, நாயக்கர் அவசரமாக எங்களுக்கும் இடம் பண்ணு; கிறார். என்னை யறியாமலே எனக்கு முக்குத் தண்டு சுருங்குகிறது. கூடம் பூரா அப்படி ஒரு 'கம் நெய்யோடு சேர்ந்த தேங்காய் எண்ணெய். இரண்டு தட்டுக்களில் ஆளுக்கு இரண்டு மூன்று திேன் குழலுடன் நாயக்கரின் மனைவி சமையல் அறையிலிருந்து வருகிறாள். சிவக்க எடுத்திருக்கிறாள். என் பிடித்தம் இவளுக்கு எப்படித் தெரிந்தது? மானேஜர் ஊறும் ருசி நீரை உறிஞ்சி விழுங்குகிறார். 'இதெல்லாம் எனக்கு ஆவாதம்மா. பையனுக்குக் கொடு?’’ "வீட்டு விளைச்சலிலேயே சுட்டதுங்க, ஒண்ணும் செய்யாதுங்க. எண்ணெய் கூட ந ம் மா த் து க் காயில் ஆட்டினதுதான். நெய்யும் கொட்டில் மாடுதான். &#üdfr மாரே சந்தோஷமா சாப்பிடுங்க. ஒண்னும் செய்யாது.”* நே -11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/167&oldid=1403619" இலிருந்து மீள்விக்கப்பட்டது