பக்கம்:நேசம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162லா. ச. ராமாமிர்தம்


'அம்பி வீட்டில் வத்தி வைக்காதே. வாழ்க்கையிலே இப்படித்தான். விசுவாமித்திரன் தபஸ். அப்பப்போ விண்." நெஞ்சில் பாலாவின் காலடிச் சத்தம் கேட்கும் பயத்தில் அவசர அவசரமாக விண்டு வாயில் போட்டுக் கொள்கிறார். அப்புறம் வெற்றிலை, புகையிலை. பாவம் மூன்று நாள் அவஸ்தைப்பட்டார். ஒருநாள் பாங்குக்குப் போகமுடியவில்லை. பாலாவின் கண்கள் என்மேல் சினம் கக்குகின்றன. நான் என்ன செய்ய? எல்லாரும் தப்பித்துக்கொள்ளும் நேரம் நான் என்ன செய்ய? இந்த வீட்டில் பூஜை அறை இருக்கிறது. சுவரில் மூன்று புறமும் அடைத்த படங்கள். ரவிவர்மாவின் லட்சுமி, சரஸ்வதி, ராமர், பிறகு, லட்சுமணர், ஆஞ்சனேயர் குரூப். விரித்த சடை, இடுப்பில் கை. முறுக்கிய மீசை ஆகாசத்தி லிருந்து இறங்கிக்கொண்டிருக்கும் கங்கையைத் தாங்கிக் கொள்ளக் காத்திருக்கும் சிவன். கோய கங்கா, கங்கா பாலா? தோளில் கிளியுடன் மீனாட்சி. ராமகிருஷ்ணர் விழிகளில் உள்ளுக்கு வாங்கிப்போன பார்வை. லேசாக வாய் திறந்து இரண்டு பற்கள் தெரியும் புன்னகை. ஆள் உயரம் வெண்கலக் குத்துவிளக்கு. பூஜா பாத்திரங்கள். பூஜா திரவியங்கள்? எப்பவும் தேங்கிய அகிற் புகை (பாலா) சுவரோரம் சாத்தியிருக்கும் தம்பூர், ஆனால் பூஜை செய்ய சாஸ்திரிகள் வரவில்லை. யாரும் சேய்யவில்லை. இத்தனை படங்களுக்கும் நடுநாயகமாய் உயிர் சைஸ்-க்கு ஒரு கலர் போட்டோ என்லார்ஜ்மெண்ட் கொசுவக் கட்டில், கொழ கொழவெனப் பசு போன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/168&oldid=1403620" இலிருந்து மீள்விக்கப்பட்டது