பக்கம்:நேசம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனகை11


வில் ஒரு அத்தியாயம் கர்ப்பத்துள் இருந்தே குழந்திை பேசுகிற மாதிரி குழந்தையாகவா பேசுகிறது? நூற்றுக் கிழவனாக பேசறது! கற்பனையைக் கண்டதாகக் கொள்ள முடியுமா? அப்படி அல்ல என்றும் சொல்ல முடியுமோ? ஜீவனின் வேட்கையே கர்ப்பத்துக்கு மீள்வதுதான். அந்த வேட்கை வேகத்தின் நாளடைவான விளைவுதான் சாவு என்று ஒரு கட்சி, இந்த இருள் அந்த இருளில் ஒரு பங்கு மேலும் இருக்குமெனில் யமன், தர்மராஜன்தான் தலைமயிரை ஒரு அசுரப்பிடி இறுகப்பற்றி அப்படி இப்படி அசைய வொட்டாமல் தலையணையில் இருத்தியது. அந்த அதிர்ச்சி தெளியுமுன் கூச்சலுக்கு வழியில்லாமல் வாய் மேல் இரு அதரங்கள் பதிந்தன. மூச்சு திணறிற்று. எவ் வளவோ திமிற முயன்றும் வாயைக் கவ்வல் விடவில்லை. மேலும் மேலும் இறுகத் தழுவலில் கார்மேல் மார்பு அழுந் திற்று எலும்பையே உருக்கிட உடலைத் திப்பியாக்கி உயிரையே உறிஞ்சும், உறிஞ்சிக்கொண்டிருக்கும், உறிஞ்சிக் கொண்டேயிருக்கும் ஸ்மரனையே தப்பிவிடும் நிலையில் ஆவிங்கனம்-சட் டென விட்டது! அறையினின்று ஒடி மாடியிறங்கும் திடுதிடு தாழ்ந்து அடங்கிய சிரிப்பு கண் கட்டைப் பிய்த்து எறிந்தார். இருள் தவிர வேறு தெரியவில்லை. யார்? என்ன? எங்கே: சூலம் மார்பில் விண்விண் உள்ளே ஏற்கனவே இற்றுப் பொய்க்கொண்டிருந்த ஏதோ ஒன்று பொட்டென அறுந்தது. கீழே இறங்கி ஓடினார். கூடத்து வெளிச்சம் கண்ணை மின்னலாகப் பறித்தது. கூட்டம் அவர்களிடையில் மறித்துத் தள்ளிக்கொண்டு நேரே சமையலறைக்கு ஓடினார். அங்கிருந்து அவர் வெளிப்பட்டபோது, அவர் கையில் உப்பு ஜாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/17&oldid=1403441" இலிருந்து மீள்விக்கப்பட்டது