பக்கம்:நேசம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164லா. ச. ராமாமிர்தம்


'ஏலே அம்பி!' மானேஜர் என் முதுகில் அறைகிறார். அரை சூடாய்த்தான் விழுகிறது. என்ன பரிட்சையில் வெளுத்து வாங்கிட்டயே!” என்ன படித்தேன், எப்படிப் படித்தேன், பரிட்சைக்கும். போனேன்? இரவு பகல் தெரியாமல் ஏக்தம் செஞ்சு. முடிக்கனும் என்மேல் இத்தனை பிசியமாக இருப்பவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் நேராமல் இருக். கணும். இந்தக் கவலை தெய்வத்தை வேண்டியதும் இதுதான் என்னை மீட்டிருக்கவேண்டும் என் செயல் இதில்-எனக்குக் கனவாக இருக்கிறது திகைப்பாக இருக்கிறது. 'சிவராம. , என்ன மொன மொணக்கிறாய்?" אל-א 'நான் என்ன லார் கேட்கப் போறேன்? அல் வேர்க்கடலை-’’ - 'ெ, § 'அல்வா, வேர்க்கடலையா? இந்தச் சமயத்தில் அது போதுமா? நீயே பாலாஜி ஹோட்டலுக்குப் போய், இன்னி ராத்திரி பாங்க் மொட்டை மாடியில் நிலா டின்னர் ஏற்பாடு பண்ணிடு ஐட்டங்கள் உன் இஷ்டத்துக்கு-’’ சிவராமன் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய், கழுத்தில் ஒரு குத்து விடுகிறான். இது யார் செலவு? தோளைத் துரக்குகிறேன். 'எனக்கென்ன தெரியும்? மானேஜர் சொன்னதைச் செய்-’’ 'இன்னிக் கதை எப்படி இருந்தாலும் சரி, நாளைக்கு எனக்கு நீ தனியா அல்வா, நெய்க்கடலை வாங்கிக் கொடுத்து டனும் ஆமா, சொல்லிட்டேன்." எனக்குச் சிரிப்பு வருகிறது. மொட்டை மாடியில் மேஜை நாற்காலிகளை ஏற்றியாகி: விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/170&oldid=1403622" இலிருந்து மீள்விக்கப்பட்டது