பக்கம்:நேசம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166லா. ச. ராமாமிர்தம்


'அத்தானே பார்த்தேன், ராயர் நேராகவே ப்ரலன்னம் ஆயிட்டாரேன்னு: எல்லாம் அடி மடிலே கைபோடத்தான்." ஆனால் மானேஜர் வெறிபிடித்த மாதிரி இன்னும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார், பச்சைச் குழந்தை மாதிரி வயிறு தெரியாமல் நான் எழுந்து அவர் பின்னால் நின்று அவர் காதண்டை குணிகிறேன். அவர் முழங் கையைத் தொடுகிறேன். லார்: கோபத்துடன் என் கையை உதறுகிறார். "ஏன் ராயரே எங்கேயோ போயிட்டீர்?’’ "இதோ இருக்கேன் அண்ணா: பதறி ஓடிவருகிறார். "அந்தப் பாதாம்.கீரை இன்னொரு கப் ஊத்துமேண்.ஒழுங்காய்ப் பரிமாற வந்திருக்கேளா இல்லே பண்டங்கனை இங்கே கோலுவச்சு அப்படியே எடுத்துண்டு போயிடததா உத்தேசமா? உமக்கு எல்லாமே பில்தானே? ஊத்தும்ஊத்தும். இங்கே இன்னொரு கப்பும் ஊத்திலச்சிடும். அம்பி என்னைத் தொடாதே. சொல்லிட்டேன். பின்னாலிருந்து என் கழுத்தின் மேல் மூச்சுவிடாதே சொல்விட்டேன். நான் அப்புறம் கெட்டவனாகிவிடுவேன். என்னைக் கட்டுப்படுத்த தி யார்?"

  • எல்லோரும் என்னையே பார்க்கின்றனர். சொரணை கொண்டாட எனக்குத் தகுதி ஏது? அதுவும் லார் உங்க ளிடமா? ஆனால் விழிகள் உறுத்துகின்றனவே:

ஏ, பாலாஜி ராவ், குடி கெடுக்கவே நேரில் வந்தயா? டேய் ஒருநாள் உன்னை மடக்கி வச்சு உதைக்காட்டா என் பேர் அம்பி இல்ல, ஆமாம் என் பேர் என்ன? நேரம் ரொம்ப ஆகிவிட்டது. பயமாயிருக்கிறது. அந்தச் சினம் கக்கும் விழிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/172&oldid=1403625" இலிருந்து மீள்விக்கப்பட்டது