பக்கம்:நேசம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா167


அற்புதமாய் இரு பக்கங்களில் அச்சுப்பிடித்தாற் போன்று வளைந்த புருவங்கள். முழுக் கறுப்பு அல்ல. லேசாக சாம்பல் கலந்த விழிகள். நீறு கலந்த அந்தக் கணகணப்புத் தழல்களை நினைக்கையிலேயே பிடரி சிலிர்க்கிறது. அவளை என்றுமே என்னால் நேர்முகமாகப் பார்க்க முடியாது. மானேஜருக்கு எப்பவுமே அவளிடம் கிலிதான். இங்கு நான் வந்திருக்கக்கூடாது. மானேஜர் என்னைக் கேடயமாகப் பயன்படுத்தித்தான் என்னைத் தன்னோடு வைத்துக்கொண் டிருக்றோர். அவர் செய்யும் குற்றங்களுக்கு நான் கூட்டாள். ஒண்டியாக மாட்டிக்கொள்வதைவிட கூட்டாளி சேர்த்துக் கொண்டால் தென்பு அல்லவா? - - و ه'g; 'வண்டி கொண்டு வரட்டுங்களா! துடன் வட்டமிடுகிறான். முத்தையா பயத் ‘'வேண்டாம் நடக்கிறேன். நடந்தால்தான் உடம்பு வசப்படும். லோட் கூடத்தான் ஐ டோன்ட் கேர்.” 'அம்பி உடிைார் படுத்தினான். நான் கேட்டுக்கல்லே. ஐ டோன் கேர். என் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அம்பி பெரிய மனிதனாகி விடுவான். இந்தப் பார்ட்டியே, அம்பி யைப் பெரிய மனிதனாக்கத்தானே? அம்பி எங்கே? டேய், எங்கே போயிட்டான்?’’ ""வீடு வரை வரட்டுங்களா?’’ 'அதான் அம்பி இருக்கானே பாடி கார்டு ஏ அம்பி!' பக்கத்திலேயே நிற்கிறேன், ஸாருக்கு என்ன? லேசாகத் தள்ளாடுகிறார். என் தோள் மேலே கையை வைத்துக்கொள் கிறார். பேளர்ணமி அல்லது அடுத்த நாள். ஒழுகும் நிலவொளி காய்ந்தே, காற்றாகப் படர்ந்துவிடாமல் இருக்க இரவின் மேலேயே நீலப்பொடி தூவியிருப்பதுபோலும் ஒரு விபரீத உணர்வு. நேரம் ரொம்ப ஆகிவிட்டது தலைக்குமேல் போய் விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/173&oldid=1403626" இலிருந்து மீள்விக்கப்பட்டது