பக்கம்:நேசம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170லா. ச. ராமாமிர்தம்


சமைத்துப் பார், கரும்புப் பயிர், ஷாஜஹானின் துயரங் கள், மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதை, சத்திய சோதனை (காந்தி) பிறகு அதுவே ஆங்கிலத்தில், ஒமார் கயாம் ராமகிருஷ்ண சரிதை உபதேச மொழிகள், மாடியில் ஒழுங்கையில் ஒரு கிழிந்த சோபா அதில் சுருண்டு படுத்த வண்ணம் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு தாஜ்மகால், நயாகரா, மானஸ்ரோவர், கன்யாகுமரி, கங்கோத்ரி இருந்த இடத்திலிருந்துகொண்டே போகாத இடம் இல்லை. இடம் காலம் தாண்டிக்கூடவேளையின் ரஸ்ாயணம், ரசல்வாதம். எங்கோ பிறந்து, எங்கோ பாய்ந்து, ஆங்காங்கே ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து, பெயர் மாறி பெயர் ஒன்றி, இடம் கடந்து, எவ்வளவு நீண்ட யாத்திரை! பூஜையில் விரித்த சடையில் இந்த மகா பிரளயத்தை வாங்கிக்கொள்ள இடுப்பில் கைகளுடன் பூஜையறை படத்தில் மகா ப்ரபு நிற்கிறான்! ஹே கங்கா மாபா, கங்கா மாதா, கங்கா தேவி, ஜான்னவி கங்கா பவானி, கங்கா ஜமுனா, ஹே கங்கா சரஸ்வதி சரணம் சரணம் உன் கோபத்தைத் தாங்க நாங்கள் யார்? கங்கா-காவிரி, கங்கா-வோல்கா அந்தி வேளையில் சிந்தனை மயக்கில் எல்லாம் ஒரே உழப்பலாய், ஒரே மகா நதியாய் அதுவே ஒரு பெரும் உண்மை-அதுவேதான் உண்மையெனப்படுகிறது. --கங்கா பாலா. இப்படி என் இதய விலாசத்தில் பாயும் மகா நதியில் மூழ்கி எழுகையில் ஆடை உடலோடு ஒட்டிக்கொண்டு அங்கங்களின் விளம்பல்களில்-அவள் நிர்வாணமாக எழுந்தாலும் அவளுடைய நெருப்புக் குளியல் தீண்ட முடியாத பொற் பதுமை, கங்கா. ஜ்வாலா-பாலா ஜ்வாலா , ஜ்வாலா பாலா வியப்புறுகிறேன். இதென்ன ஸ்வரங்கள் என்ன நாமாவளிகள், இதென்ன அர்ச்சனை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/176&oldid=1403630" இலிருந்து மீள்விக்கப்பட்டது