பக்கம்:நேசம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா171


நிர்வாணி, தபஸ்வினி அமானுஷ்யை மகா ஜ்வாலா 敦_疗岱*a கங்கையை அவன் தாங்கியதுபோல் நான்-நான் கன்னங்களடியில் குறுகுறுக்கிறது. ஆனால் தழலை ஏந்த நான் சிவனா? எனக்குக் காதல் பிறந்துவிட்டதா? இ.ல்...லை. அடித்தும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு இன்பக் குழப்பம். தெளிந்து இப்போ சொல் கிறேன். இது காதல் இல்லை. ஆனால் நட்சத்திரத்தை, விழுங்கிவிட்டு அது உள்ளே ஒடி ஒடி விளையாடுவது தாங்க முடியவில்லை. எண்ணம் பட்டபின்தான் அதன் துணிச்சல் தெரிந்தது. உணர்வில் தோய்ந்ததும் திகில் வந்தது. இந்த விஷயம் என்னுடைய கிரகத்தில் அடங்கியதல்ல. மானேஜர் உடல்நிறம் ஒரு சமயம்போல் இல்லை. குளித்துவிட்டு வெந்நீருள்ளிருந்து புறப்பட்டவுடன் இடுப்பில் சிறு முண்டுடன் பிதுங்கும் இளம் தொந்தியுடன் இல்லை, தான் வந்ததுக்கு இப்போது பெரிதாகிக்கொண்டு வருகிறது.) தக்காளிப்பழம் போல் டால் அடிக்கிறார். நேரம் ஆகஆக ஒரு மாதிரியாக தேஜஸ் மங்கி வெளுத்துக் கொள்கிறார். சில: சமயங்களில் கறுப்பு காட்டுவதுபோல் கூடத் தோன்றுகிறார், உடல் வாகா? அல்ல படும் பல நோய் வாகா? 'அம்பி சொல்ல மறந்துட்டேன். அடுத்த வாரம் தஞ்சையில் காம்ப் போடறான். உன்ன இன்டர்வியூவுக்கு அனுப்பச் சொல்லி எழுதியிருக்கான்-ஐயோ!' மானேஜர் முதுகில் மளுக்கென்று முறிந்தது. ஒன்றுக் கொன்று ஆகிவிட்டதா? தலை வலி போய் திருகு வலி. எனக்கு அழுகை வருகிறது. ஐயோடக்ஸ் தடவுகிறேன். நல்ல வேளை சுளுக்குத்தான்.' - "ஏன் ஸார், நான் ஏன் லார் போகனும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/177&oldid=1403631" இலிருந்து மீள்விக்கப்பட்டது