பக்கம்:நேசம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா173


தஞ்சாவூருக்கு இன்டர்வுபூவுக்குப் போய் வந்தாச்சு "உன் மானேஜர் உன்னைப் பற்றி ரொம்ப சிபாரிசு செய். திருக்கிறார் அவரைவிட நான் வடிகட்டப் போவதில்லை. இருந்தாலும்- என்று என் வேலைக்கே சம்பந்தமில்லாத பேச்சு கேள்விகள் இல்லை-பேசிவிட்டு-இன்டர்வியூ முடிஞ்சு போச்சு. அற்புதமான காலை இன்று சூரியனே ஆகாச கங்கை யில் குளித்துவிட்டு பளிச்சென்று பட்டணம் பார்க்கப் புறப் பட்டிருக்கிறான். எழுந்து பால்கனிக்கு வந்து ராஜ்யத்தை ஒரு கண் னோட்டம் விடுகிறேன். சுவரோரம் சிலந்திக் கூடு ஒன்று பொற் கோலமாய் மின்னுகிறது. தோட்டத்தில் பாலா செடிகளுக்குத் தண்ணிர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள். பக்கத்தறையிலிருந்து மானேஜர் 'அம்பி வேலையா இருக்கியா?” "'என்ன லார் வேனும்?’’ 'பாலாவுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்." கீழே விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறேன். வாசல் தாண்டுகையில் கால் அடி சறுக்கி நான் வந்த வேகமோ, சேறோ, வாழைப்பழத் தோலோ, கல் தடுக் கியோ- ஆ1-என் குரல் கேட்டுப் பாலா திடுக்கெனத் திரும்பு-அவள்கேல் நான் விழுந்தோ என்மேல் அவன் விழுந்தோ-அவள் கீழே விழா வண்ணம் தாங் கி க் கொண்டேன்.

  • سس تحي... gi... ;. *

அந்த அமானுஷ்யமான மிருக அலறலை என்னென்று சொல்ல? அவள் திமிறித் துள்ளிய வேகமே அவளை நாலடி தள்ளிக்கொண்டுபோய் வீழ்த்திற்று. 'வில்-வில்-வீல்ட"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/179&oldid=1403633" இலிருந்து மீள்விக்கப்பட்டது