பக்கம்:நேசம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174லா. ச. ராமாமிர்தம்


உச்சமும் கட்டையுமாய் மூச்சுவிடாமல் இடைவிடா அலறல்கள். அவள் முகம் கோணிக்கொண்டு விட்டது. தாங்க முடியாமல் செவிகளைப் பொத்திக்கொண்டேன். எனக்கு நகர முடியவில்லை. உங்ளங்காலிலிருந்து தலை வரை அப்படியே ஒரு உதறல். அப்படியும் செவிகளைத் துளைத்தன. குரங்கா பட்சியா, பூனையா, கீரியா? அவள் உடல் பூராவும் பூமியுடன் கிடுகிடென ஆடிற்று. அந்த முகத்தில் மாறி மாறி அந்தத் திகில், கோபம், பைத்தியத்தையும் -சகிக்கவில்லை. என் முகத்தைப் பொத்திக்கொண்டேன். நான் பார்ப்பது மனிதமே அல்லட ஏதோ ஒரு ஜந்து. ஆமாம், மிரண்ட ஜந்து. 'அம்பி, அம்பீ!' மானேஜர் பின்னாலேயே வந்து விட்டார். 'ஒன்றுமில்லை. பயப்படாதே. பாலா! பாலா!அவளுக்கு வழிவிட்டு நில். பாலா! பாலா! ஏ பாலா?" அவரைத் கண்டதும் அவள் பின்னடைந்தாள். விழிகளில் திகில் வட்டங்கள். தப்பி ஓட முகம் அப்படியும் இப்படியும் அலைந்தது. எங்கிருந்தோ ஓடிவந்தாற்போல் மூச்சு இறைத்தது.

  • பாலா! பாலா! "

புயல் துழைந்தாற்போல் பாலா வீட்டிற்குள் ஒடினாள், திடுதிடுவென மாடி ஏறி, அறைக் கதவு தடாலென்று அறைந்து மூடிக்கொண்டது. ஆனால் உள்ளிருந்து கத்தல்கள் ஒயவில்லை. வேட்டி நுனியில் மானேஜர் முகத்தைத் துடைத்துக் கொண்டார். துடைத்த இடங்களில் பப்பாளிப் பழம்போல் சிவப்பு கண்டு உடனே வெளுப்பு விட்டுக்கொண்டது. 'இந்த அலை அடங்க மூணு நாளேனும் ஆகும். நம் வயிற்றில் மண் அவளும் சாப்பிட மாட்டாள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/180&oldid=1403634" இலிருந்து மீள்விக்கப்பட்டது