பக்கம்:நேசம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா175


துடைக்கத் துடைக்க அவர் முகம் கொப்புளித்த வண்ணம் இருந்தது. "'நான் அவளுக்குக் காவல் இருக்கணும். நீ இன்று அவள் கண்ணில் படக்கூடாது. அம்பி நீ காவி பண்ணியாகணும். நான் பண்ணின சோதனை தோற்று விட்டது.” . இது வந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன். கள்ளன் இன்னும் உள்ளே பதுங்கிக் கொண்டுதான் இருக் கிறான் நீ ஆபீஸ் போயிடு. நான் சொல்லி அனுப்பும் வரை வராதே." "நான் ஒண்னுமே பண்ணலை லார்-எனக்கு ஒண்னுமே தெரியாது!’ ஏதோ உளறுகிறேன். 'இல்லை. எனக்குத் தெரியும், நான் இப்போ அவளைக் கவனிக்கணும். இன்னிக்கு நான் ஆபீசுக்கு வரமுடியாது. சாயந்திரமா வா, நீ வந்தது தெரியாமல் வா-எப்படியும் நீ அவள் கண்ணில் படக்கூடாது. உன் ஓசை அவளுக்குத் தெரியக் கூடாது." ஆபீஸில் என் பேயடைந்த முகம் கண்டு விசாரித்தவர் களுக்கு என்ன சாக்கு சொன்னேனோ ஞாபகம் இல்லை. எப்போது மாலை வரும்? எப்போது மானேஜரைப் உார்ப்பேன்? அவர் வாசலில் காத்திருந்தார். 'பரவாயில்லை. முற் பகல் மூணு மணிக்கு வெறி தணிஞ்சு, தாஜா பண்ணி கதவைத் திறக்கப் பண்ணி, மாத்திரை கொடுத்து துரங்கப் பண்ணியிருக்கேன். நாளைக் காலை வரை கட்டைதான். அம்பி காப்பி போடறியா? காலையிலேருந்து கொலை பட்டினி." . நான் காப்பி போட்டுக் கொண்டிருக்கையில் மானேஜர் கைகளை வீசிய வண்ணம் என்னவோ பேசிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாவினார். எத்தனை நாள் உள்ளடக்கி வைத்திருந்த பித்தமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/181&oldid=1403635" இலிருந்து மீள்விக்கப்பட்டது