பக்கம்:நேசம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176லா. ச. ராமாமிர்தம்


'மரகதத்துக்குத் தாங்கலே. இதே சாக்கில் படுத்தவள் தான். மறுவருஷம் போய்விட்டாள். பாலாவுக்கு நேர்ந்த தற்கு அவளால் நாங்கள் பட்ட பாடு, ஏன் அவள் பட்ட பாட்டுக்குச் செத்துப்போயிருக்கலாம். அவள் செத்து போயிருந்தால் மரகதம் தக்கியிருப்பாளோ என்னவோ? ஆனால் அவள் மனுவிதானே? எந்தத் தாயாருக்குத்தான் தாங்கும்? -ஏதேதோ துண்டும் துணுக்குமாக தாக்கல் மோக்கல் இல்லாமல். ஆனால் இல்லை என்று சொல்ல முடியுமோ? மானேஜர் திடீரென்று சிரிக்கிறார். புகை கக்குகிறது. 'அம்பி, பாலாவை என்னன்னு நினைக்கிறே? பாலா அழகா இல்லையா?” இதென்ன கேலிக்கூத்தான கேள்வி: "அம்பி, அழகாகவே பிறக்கப்படாது. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் இருக்கணும் சரி. அதுதான் பத்திரம், பாலாவை அழகு என்று சொல்லமாட்டேன். இது ஒரு அமானுஷ்யம், விபரிதம். இந்த பெர்ஃபெக்ஷன் பாத்த மில்லை. வரம்பு மீறின. கேஸ் நானும் மரகதமும் அப்படி ஒன்றும் ரதி மன்மத ஜோடி இல்லை. வம்சா வியில் இவள் மாதிரி இருந்து இப்போ இவளில் திரும்பியிருக்கிறார்களோ? இப்போ பாலா மங்கிப் போய்விட்டாள் என்று சொல்லனும், பத்து வயசில் அப்பா என்ன டால் என்ன உடல் வாளிப்பு: கருக்கச் சொல்லி முடிச்சுடறேன்-’’ 'அன்று தை வெள்ளிக்கிழமை. தாயும் பெண்ணும் மங்கள ஸ்நானம் செய்து நேய நிஷ்டையாக ராகு காலத்துக்கு முன்னால் மாவிளக்கு ஏற்றி, முறைப்படி மலையும் ஏறி யாச்சு. பாலா பள்ளிக்கூடம் போற வழியில்-கொஞ்சம் தள்ளிப் போகணும்-தெரிஞ்ச மாமிக்கு பிரசாதத்தைக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்லியிருக்காள். அவ்வளவு தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/182&oldid=1403636" இலிருந்து மீள்விக்கப்பட்டது