பக்கம்:நேசம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா177


மாலை பாலா திரும்பி வரவேண்டிய வேளைக்கு வரல்லை. அதுபோல் அவள் அங்கே இங்கே என்று ஆயாக் கால் போட்டு கொண்டு இஷ்டத்துக்கு வருவதில்லை.

5T GuDsT ஏறிக்கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் பான் பண்ணிப் பாத்திருக்காள். 'பாலா இன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்கே வரல்லியே!” வயிறு பகீர்! மறுபடியும் போன்: மாவிளக்குப் பிரசாதம் மாமியிடம் போய்ச் சேரவில்லை. "பாலா இங்கு வல்லியே!' எப்படி இருக்கும்? பிறகு எனக்கு போன். மணி ஏழு. எட்டு, ஒன்பது, பத்து. போலீசில் எழுதி வச்சாச்சு, எங்களால் முடிஞ்ச வரை தேடின. பிறகு, பீச் முழுக்கச் சல்லடை போட்டுச் சலிக்கிறது. இப்போ நினைச் சாக்கூட இப்போ மாதிரி இருக்கு. மரகதத்துக்குப் பைத்தியம் பிடிக்கல்லே. அவ்வளவுதான். அல்லது பிடிச்சுடுத்தா? குத்துவிளக்கு ராப்பூரா அவ்வப்போது அதை நமஸ்கரிக் கிறாள். பாலா போட்டோவை மார்போடு அணைச்சுக்கிறா. ஸ்தோத்திரம் சொல்றா! என்னிடம் வருகிறாள். "நீங்கள் தைரியமா இருங்கோ. என்னண்ணா பண்ணுவோம்? கேட்டுக் கொண்டே உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அடக்கிக் கொள்ளப் பார்க்கிறாள். கறையறாள். உண்மையில் யாருக்கு யார் ஆறுதல்? விடியுமா? ஒரு வழியா விடிஞ்சது. போலீஸ் நாய் வந்தது. ஒடித்தோ ஒடித்தோ அப்படி ஒடித்து. வாரைப் பிடிச்சுண்டிருந்தவனுக்குத் தாக்குப் பிடிக்க முடியல்லே. எங்கள் வீடு தாண்டி இரண்டு மூன்று மைல் இருக்கும்-ஒரு பாலத்தடியில் கரையோரமா ஜல விளிம்பில் ஸ்மரணை இல்லாமல்.’ மேலே பேச்சு ஒடவில்லை. அவருக்குக் குரல் கம்மிற்று. எனக்கு அழுகை வந்துவிட்டது. வெட்கம் கெட்டு முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதேன். மானேஜர் அழவில்லை. நே.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/183&oldid=1403637" இலிருந்து மீள்விக்கப்பட்டது