பக்கம்:நேசம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா179


கஷ்டம் கஷ்டம். படுகிறவர்களுக்கா, படுகிறவர்களைப் பார்ப்பவர்களுக்கா? பார்க்காத சிகிச்சை இல்லை. இடம் மாறினால் மனம் ம1றும் என்று மாற்றல் வாங்கிக்கொண்டேன். நோ யூஸ் . பாலா ஒருவாறு தன் கலவரம் அடங்கி, அல்லது அடங்கினாற் போல் தோன்றி, தண்ணீர் மேலே அமைதியாக ஒடிற்று உள்ளே சுழலை காட்டாமல். மரகதம் தன் பெண்ணுக்கு நேர்ந்ததை, நேர்ந்திருக்கக்கூடியதை எண்ணி எண்ணி வெதும்பிச் செத்தாள். அதுதான் மிச்சம். நானும் பாலாவும் மிச்சம் . உற்றார் உறவினர்கள் இரண்டு பக்கங்களிலும் எங்களுக்குச் சொல்லும்படியாய் இல்லை. நாங்களும் இந்த மாதிரிச் சூழலில் அவர்களை நாடமாட்டோம். ஒண்ணே ஒண்னு பெண்ணே பெண்ணு, கண்ணே கண்ணு, எப்படி?' -சிரித்தார். ஆயிரம் துக்கங்களின் முத்தாய்ப்பு. வழி தானே வருகிற மாதிரி வேளையின் சமைப்பு இன்னும் புரியாத புதிர். அடுத்த நாளே என்னை கிளார்க் ஆக ப்ரமோஷன் செய்து கோயமுத்துருக்கு உடனே மாற்ற லாக ரீஜினல் ஆபீஸிலிருந்து தந்தி வந்தது. உடனே நெய்க் கடலையும் அல்வாவும் எனக்குத்தான். அதில் நினைப்புக் கூட ஒட்டவில்லை என்று யாருக்குத் தெரியும்? வழியனுப்ப மானேஜர் ரயிலடிக்கு வந்திருந்தது மற்ற வர்களுக்கு ஆச்சரியம். ரயில் கிளம்பும் சமயத்தில் திடீரென்று எ ன் ைன அவர் அனைத்துக்கொண்டது அதைவிட ஆச்சரியம். அவர் கண் கலங்கியதைக் கவனித்திருந்தார் களெனில்-ஹகும்-நல்லவேளை ரயில் நகர்ந்துவிட்டது. கையை உயரத் தூக்கிக் காட்டிக்கொண்டு ப்ளாட்பாரத்தில் அத்தனைபேர் நடுவிலும் தனியன்-நெஞ்சில் அழுந்திவிட்ட அழியாத புகைப்படம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/185&oldid=1403639" இலிருந்து மீள்விக்கப்பட்டது