பக்கம்:நேசம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180லா. ச. ராமாமிர்தம்


கோயமுத்துரர். கிளை ஆபீஸ் மிகப் பெரியது. ஐம்பது அறுபது சிப்பந்திகள் வேலை செய்கின்றனர். அத்தனை பேரும் ஒழுங்காய் செய்வதாக இருந்தாலும் ஓயாத வேலை. இன்னும் இருபதுபேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் வேலை. ஆகையால் யாரும் வேலை செய்யவில்லை. ஆனால் யூனியன் மீட்டிங்கு அவ்வப்போது வங்கி வாசலுக்கு வெளியே உள்ளே போகாமலே நடக்கும். ஆரவாரங்கள் உள்ளே கேட்கும். இவைகளுக்கெல்லாம் குறைச்சலே இல்லை. நான் விட்டுவிட்டு வந்த இடம்போல் நிம்மதி இல்லை. ஆனால் நிம்மதி இப்போது எனக்கு வேண்டாம் . பைத்தியம் பிடித்து விடும். என்னை மறக்க வழி பிறந்தால் சரி. பைத்தியம் பிடித்தாற்போல் உழைக்கிறேன். யூனியன் காரியதரிசி என்னை வெறுப்புடன் பார்க்கிறான். 'புது ஜோர், புது, துடைப்பம் சண்டைக்கு இழுக்கிறான். நான் போகவில்லை. 'அம்பி ஸார், உங்களுக்குத் தந்தி!' எனக்குத் தந்தியா எனக்கு யார் உற்றார்? உறவினர் ஏது? பிரிக்கிறேன். ‘'மேனேஜர் அண்ட் டாட்டர் டெட், மீட் மீ, டாக்டர் கந்தரவதனம்." அழுகை வரவில்லை. துக்கம் கூட இல்லை. கொஞ்சம் செத்துப்போகும் நிலை என்ன, இன்னதென அப்படி இறந்தவர்தான் அறிவர். இந்தச் சாவு முழுச்சாவோடு போய்க் கலக்கும் வரை விண் விண்-உயிர் பெற்ற சாவு. இங்கு வந்து இன்னும் மூன்று மாதங்கள் முழுக்க ஆசவில்லை. மூன்று நாட்கள் லீவு போட்டுவிட்டுக் கிளம்பு கிறேன். எனக்கு ஏன் ஆச்சரியம் கூட இல்லை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/186&oldid=1403640" இலிருந்து மீள்விக்கப்பட்டது